Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமருடன் சந்திப்பு


இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மேதகு திரு எலி கோஹன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

வேளாண்மை, நீர், புத்தாக்கம் மற்றும் அறிவுசார் கூட்டு முயற்சி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் உட்பட இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு விசயங்கள் குறித்தும், இருநாட்டு மக்களிடையேயான உறவையும், இது நாடுகளின் பொருளாதாரங்களையும் மேம்படுத்துவது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்தார்கள்.

பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விசயங்களில் தங்களது கருத்துக்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

***

AD/BR/RK