Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேலின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸ் பிரதமரை சந்தித்தார்

இஸ்ரேலின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸ் பிரதமரை சந்தித்தார்


இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்ஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியை தலைவர்கள் ஆய்வு செய்தனர். இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்திக்கான வாய்ப்புகள் மூலம் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பயனடையுமாறு கூறி பிரதமர் ஊக்குவித்தார்.

***************