Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இளவரசர் கரீம் ஆகா கான் பிரதமருடன் சந்திப்பு


s2015040763888 [ PM India 0KB ]

s2015040763889 [ PM India 0KB ]

s2015040763890 [ PM India 0KB ]

ஆகா கான் வளர்ச்சி கழக இணைப்பின் தலைவர் இளவரசர் கரீம் ஆகா கான் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவர் தற்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி நாளை பத்ம விபூஷன் விருதை வழங்க உள்ளார்.

குறிப்பாக ஊரக வளர்ச்சியிலும் சுகாதாரத்திலும் ஆகா கான் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிய பிரதமர், அவர் குஜராத்தின் முதல்வராக இருந்த போது இதனைக் கண்டறிய வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார். தூய்மையான இந்தியா, கங்கை நதி தூய்மைப் படுத்துதல் ஆகிய திட்டங்களில் ஆகா கான் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். பெண் குழந்தைகளுக்காக கழிப்பறை அமைப்பதிலும் இந்த நிறுவனம் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பத்ம விபூஷன் விருது வாங்குவது எனக்கு பெருமையாக உள்ளது என்று இளவரசர் கரீம் ஆகா கான் தெரிவித்தார். ஆகா கான் நிறுவனம் ஏற்கனவே ஒரு லட்சம் கழிப்பறைகள் அமைக்கும் பணிகளை குஜராத் மாநிலத்தில் துவக்கி உள்ளது. சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை ஊக்குவிப்பது மற்றும் குடிநீர் வழங்குதலை உறுதி செய்வது போன்ற செயல்களில் இந்த நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

பிரதமரும் இளவரசர் கரீம் ஆகா கானும் மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.