Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இளம் கலைஞரின் ஓவியங்கள் மற்றும் பொது சுகாதாரத்தில் அவர் கொண்டுள்ள அக்கறைக்கு பிரதமர் பாராட்டு


பெங்களூருவைச் சேர்ந்த மாணவரான திரு ஸ்டீவன் ஹாரிஸின் ஓவியங்களைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்வளர்ந்து வரும் 20 வயது ஓவியர், பிரதமரின் 2 அழகு மிளிரும் ஓவியங்களுடன் ஓர் கடிதத்தையும் பிரதமருக்கு அனுப்பியிருந்தார். அவரை ஊக்கப்படுத்தியும், பாராட்டியும் பிரதமர் பதில் எழுதியுள்ளார்.

படைப்புத் துறைகளில் இளைஞர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் எழுதியிருந்தார். ‘விஷயங்களை ஆழ்ந்து அனுபவிக்கும் உங்களது திறமையை உங்கள் ஓவியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. நய நுணுக்கங்களுடன் மிகச் சிறிய வெளிபாடுகளும் சிறப்பாக எடுத்துரைக்கபட்டிருப்பது, மன நிறைவாக உள்ளது’, என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடியான சூழலின்போது, பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த இளம் கலைஞரின் கருத்துக்களை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். “தடுப்பூசித் திட்டம், ஒழுங்குமுறை ஆகியவற்றுடன் 130 கோடி இந்தியர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை, பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை அளிக்கிறது”, என்று பிரதமர் தமது கடிதத்தில் எழுதினார்.

நேர்மறை எண்ணங்களைப் பரப்பும் திரு ஸ்டீவனின் முயற்சிகள், மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 15 வருடங்களாக தாம் ஓவியம் தீட்டி வருவதாகவும், பல்வேறு நிலைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருப்பதாகவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் திரு ஸ்டீவன் தெரிவித்திருந்தார். பிரதமரை, தமது உந்துசக்தி என்று அவர் குறிப்பிட்டிருந்ததுடன், கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தையும் புகழ்ந்திருந்தார்.

பிரதமருக்கு திரு ஸ்டீவன் ஹாரிஸ்  அனுப்பிய ஓவியங்களைக் கீழே காணலாம்:

PM India

PM India