மத்திய அரசில் உதவி செயலர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட 170 இளம் ஐ.ஏ.எஸ் அலுவலர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
களப் பயிற்சி குறித்த அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு பிரதமர் அவர்களை ஊக்குவித்தார். பொது மக்களின் பங்களிப்பு, தகவல் ஓட்டத்தின் முறை, வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல், ஆட்சிமுறையில் மக்களின் நம்பிக்கை போன்ற நல்லாட்சிமுறை குறித்த சில அம்சங்களை அவர்களுடன் பிரதமர் விவாதித்தார்.
ஊரக சுயாட்சி திட்டம், வளமான பாரதம் போன்ற சமீபத்திய திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர், டாக்டர். ஜிதேந்திர சிங் மற்றும் ஊழியர்கள் மற்றும் பயிற்சி துறையின் மூத்த அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியின்போது உடன் இருந்தனர்.
Great interaction with young IAS officers who have recently been appointed Assistant Secretaries in the Government of India.
— Narendra Modi (@narendramodi) July 4, 2018
We discussed aspects relating to good governance. They also shared their experiences from field training. https://t.co/GU3p4A6mQg pic.twitter.com/bvbwGUWVG2