இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ரவி கருணநாயகே பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
கடந்த மாதம், சர்வதேச விசாக தினத்தை முன்னிட்டு தான் மேற்கொண்ட ஆக்கபூர்வமான மற்றும் நினைவில் கொள்ளத் தக்க இலங்கை பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். இலங்கை வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. ரவி கருணநாயகேக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் அழிவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக, இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என்பதை பிரதமர் உறுதி அளித்தார்.
வெள்ளம், நிலச்சரிவின் போது, இந்தியா உடனடியாக உதவியதற்கு, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ரவி கருணநாயகே பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவுடனான தனது உறவை வலுப்படுத்துவதில் இலங்கை அரசு ஈடுபாடுடன் உள்ளது என்றும் இலங்கை அமைச்சர் கூறினார்.
*****
Mr. Ravi Karunanayake, the Foreign Minister of Sri Lanka met PM @narendramodi. pic.twitter.com/MVu3KB7Qsq
— PMO India (@PMOIndia) June 6, 2017