மதிப்பிற்குரிய இலங்கை அதிபர் திரு. மைத்திரி பாலா சிரிசேனா,
ஊடக உறுப்பினர்களே
இலங்கையின் அழகிய நகரமான கொழும்புவில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளன நமது நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதில் நான் ஆர்வமாக இருந்தேன்.
உங்களுடைய அருமையான வரவேற்பு மற்றும் நட்பின் மூலம் பெருமை அடைகிறேன்.
இந்த பயணத்தின் முக்கியதுவம் எனது நினைவில் உள்ளது. 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த மாதம் அதிபர் சிரிசேனா, அதிபரான பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவை தேர்ந்தெடுத்து எங்களுக்கு பெருமை சேர்த்தார். நான் இங்கு வருகை தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இரு அண்டை நாடுகளும் இப்படிதான் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து சந்தித்துக் கொள்ளவேண்டும்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் இருவருக்கிடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் நமது உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் இது உதவும்.
இதைதான் இன்று அதிபர் சிரிசேனாவுடனான சந்திப்பின்போது நாம் அடைந்தோம்.
நமது உறவின் முக்கிய தூணாக பொருளாதாரம் உள்ளது.
நமது முன்னேற்றம், வலுவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான நமது உறுதியை பிரதிபலிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் நமது வர்த்தகம் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவுடனான உங்களின் வர்த்தகம் குறித்த அக்கறையை நான் அறிவேன். நான் தில்லியில் கூறியபடி இதனை சரிசெய்ய நாம் முயற்சிப்போம்.
இன்று கொண்டுவரப்பட்ட நமது சுங்க அதிகாரிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்த திசை நோக்கியே உள்ளது. இது இருதரப்பிற்கும் இடையேயான வர்த்தகத்தை எளிதாக்கும்.
வெறும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து மட்டும் நாங்கள் கவனிக்கவில்லை. புதிய வாய்ப்புகளிலும் கவனம் செலுத்துகிறோம்.
இணை செயல் படை, நடைமுறையை ஒழுங்காக உருவாக்கப்படும். திரிங்கோண மலை மண்டல பெட்ரோலிய மையமாக செயல்படுவதற்கு இந்தியா உதவ தயாராக உள்ளது.
சம்பூர் நிலக்கரி மின் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று நான் எதிர் பார்க்கிறேன். இந்த முக்கிய திட்டம் இலங்கையின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யும்.
கடல்வளப் பொருளாதாரம் இருநாடுகளுக்கும் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இருநாடுகளுக்கும் இது மிகவும் முக்கியமாகும். கடல்வளப் பொருளாதாரத்திற்காக, முக்கியமாக இருநாடுகளுக்கிடையேயான காரணத்தினால் இணை செயல் படை அமைப்பதற்கான நமது முடிவு மிகவும் முக்கியமானது.
நமது உறவின் இதயமாக மக்கள் உள்ளனர். மக்களுக்கிடையேயான தொடர்பை ஊக்குவிப்பது இணைப்பை மேம்படுத்துவது சுற்றுலாவை அதிகரிப்பது போன்ற பல்வேறு முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
வருகையின் போது விசா வழங்குவது – மின்னனு சுற்றுலா அங்கீகாரம் திட்டத்தின் வசதி இலங்கை சிங்கள மக்களுக்கு வழங்கப்படும். இது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14, 2015 முதல் அமல்படுத்தப்படும்.
புதுதில்லி – கொழும்புக்கு இடையேயான நேரடி விமான சேவையை ஏர் இந்தியா விரைவில் துவங்கும்.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய பண்டிகைகள் என்ற நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்ய உள்ளோம். இலங்கையில் தான் புத்த மதம் உண்மையில் செழிப்பாக இருந்தது. இந்த பண்டிகையில் நமது புத்த கலாச்சாரம் குறித்த கண்காட்சியை ஏற்பாடு செய்ய உள்ளோம்.
இளைஞர் நலன் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் நமது உறவின் நீண்ட கால முக்கிய முதலீடாகும்.
இலங்கையின் வளர்ச்சி பங்கு தாரராக இருப்பதில் இந்தியா பெருமைக் கொள்கிறது.
ரயில்வே துறைக்காக 318 அமெரிக்க டாலர்வரை புதிய கடன் எல்லையை நாங்கள் வழங்க உள்ளோம். கையிருப்பை நிலையாக வைத்திருக்க கொள்முதல் செய்வது, ஏற்கனவே உள்ள ரயில்வே தடங்களை மேம்படுத்தவும் சரிசெய்யவும் இது பயன்படுத்தப்படும்.
ருகுனா பல்கலைக்கழகத்தில் ரபிந்திரநாத் தாகூர் அரங்கத்தை அமைக்க நாங்கள் உதவுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
நாளை, வீட்டு வசதித் திட்டம் உட்பட இந்தியா நிதி உதவி அளிக்கும் திட்டங்களை நான் பார்வையிட உள்ளேன். 27,000 கும் மேற்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியும் இலங்கையின் சென்ட்ரல் வங்கியும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பணப்பறிமாற்ற ஒப்பந்தம் செய்ய இரு வங்கிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இது இலங்கை பண மதிப்பை நிலையாக வைக்க உதவும்.
மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். இருதரப்பிலும் உள்ள வாழ்வாதாரம், மனிதநேய அக்கறை ஆகியவற்றைக் கொண்ட பிரச்சனை இது. இதனை இந்த நோக்கத்திலிருந்தே கையாள வேண்டும். அதே நேரத்தில் இப்பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை நாம் கண்டறிய வேண்டும்.
இந்தியா, இலங்கை மீனவர் அமைப்புகள் விரைவில் சந்தித்து இருவருக்கும் பொருந்தும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது முக்கியமாகும். அதன் பிறகு இருநாடுகளும் இதனை வழிநடத்தி செல்லும்.
வருங்காலத்தில் இலங்கைக்கு ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்க அதிபர் சிரிசேனா எடுக்கும் முயற்சிக்கு நம்முடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளவும் இதனை நான் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்.
இலங்கை அமைதி, சமரசம், வளர்ச்சி ஆகியவற்றிற்கான புதிய பாதைக்கான எனது ஆதரவையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை தமிழ் சமுதாயம் உட்பட அனைத்து சமுகத்தினருக்கும் சம்மான, நியாயமான, அமைதியான மரியாதைக்குரிய ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற வருங்கால கனவுக்கான உங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் உங்களுடன் இருப்போம்.
விரைவான மற்றும் முழுமையாக 13வது திருத்தத்தை கொண்டுவருவது இந்த செயல் முறைக்கு பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அண்டை நாட்டுடனான பொது கடல்சார் உறவு உட்பட, நமது மண்டலத்தில் அமைதியையும் செழிப்பையும் மேம்படுத்தும் வகையில் நமது உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய உறுதி பூண்டுள்ளது என்று நான் தெரிவித்துள்ளேன்.
சிறந்த வரவேற்பிற்கும் விருந்தோம்பலுக்கும் அதிபர் சிரிசேனாவிற்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடைப்பெற்ற சந்திப்பு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இந்த சந்திப்பு நமது வருங்கால உறவு குறித்து எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் நல் எண்ணத்தையும் அளித்துள்ளது.
நன்றி.