Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திரு. கரு ஜெயசூர்யா, இந்த அனைத்துக் கட்சி குழுவிற்கு தலைமையேற்று வந்துள்ளார்.

இந்தியா-இலங்கை இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பிணைப்பு மற்றும் ஆன்மிகம் & கலாச்சாரப் பாரம்பரியம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்மைக்காலமாக இரு நாடுகளிடையேயான நட்புறவு விரிவடைந்து வருவதற்கு பாராட்டுத் தெரிவித்தனர். இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கூட்டுத் திட்டங்களால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். கூட்டுப் பொருளாதாரத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதன் மூலம், இருநாட்டு பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் நன்மை ஏற்படும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்தத் தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளிலும் உள்ள மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் புதிய முன்முயற்சிகள், இருநாட்டு மக்களிடையேயான நேரடி தொடர்புகள் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.