Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கை அதிபரோடு பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று கலந்து கொண்டார்.

இன்று நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமரின் கட்சி அபார வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மீண்டும் பதவியேற்றதற்கு அதிபர் சிறிசேனா வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், நமது மண்டலத்தின் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பிற்காக இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் தனது விருப்பத்தை அதிபர் வலியுறுத்தினார்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததற்காக அதிபர் சிறிசேனாவுக்கு, பிரதமர் திரு. மோடி நன்றி தெரிவித்தார். இலங்கை உடனான நட்பு சார்ந்த இருதரப்பு உறவுகளை மேம்படுத்த தனது அரசின் நீடித்த உறுதியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

மனித இனத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் பற்றி குறிப்பிட்ட இருதலைவர்கள், இந்தியப்பெருங்கடல் மற்றும் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி கூறினர்.

——