Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இராணுவ தினத்தையொட்டி பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்


இராணுவ தினத்தையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

“இராணுவ தினத்தில், வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை பாதுகாப்பதிலும் மற்றும் இயற்கை பேரரழிவுகள் மற்றும் இதர சம்பவங்களின்போதும் மனிதாபிமான முயற்சிகளில் முன்னோடியாக விளங்கும் நமது இராணுவத்தின் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும், அசைக்கமுடியாத நம்பிக்கையையும், பெருமையும் கொண்டுள்ளார்கள்.

நமது இராணுவம், என்றும் தேசத்தை முன்னிறுத்தும். நாட்டை பாதுகாக்கும் பணியின்போது தங்களது இன்னுயிரை ஈந்த சிறந்த வீரர்களை நான் வணங்குகிறேன். அத்தகைய வீரமிக்க கதாநாயகர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது.” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

***