இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிசக்தி மற்றும் இயற்கை எரிவாயு துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி தொடர் ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருந்தார்.
‘ஒரே நாடு, ஒரே தொகுப்பு, ஒரே கட்டணம்’ என்ற மாதிரியை இந்தியா அடைய இந்தக் கட்டண ஒழுங்குமுறை உதவிகரமாக இருக்கும் என்றும், தொலைதூரப் பகுதிகளில் எரிவாயு சந்தைக்கு இது உத்வேகம் அளிக்கும் என்றும் திரு புரி கூறினார்.
மத்திய அமைச்சரின் தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்ததாவது:
“எரிசக்தி மற்றும் இயற்கை எரிவாயு துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம்”.
***
(Release ID: 1912403)
AD/RB/RR
Noteworthy reform in the energy and natural gas sector. https://t.co/PqFwNg5tdX
— Narendra Modi (@narendramodi) March 31, 2023