Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய-சீன எல்லையில், ராணுவ வீரர்கள் மற்றும் மக்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்

ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக இமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தின் சும்டோவில் உள்ள இந்திய-சீன எல்லைக்கு சென்றார் பிரதமர் மோடி.

இந்தோ திபெத் எல்லைப் போலீஸ் (ஐ.டி.பி.பி) வீரர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுடன் அளவளாவிய பிரதமர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

2001ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று ராணுவ வீரர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக தெரிவித்தார் பிரதமர் மோடி.

ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அனுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனது #Sandesh2Soldiers ட்விட்டர் பரப்புரைக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருப்பதை பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஒரே பதவி நிலை, ஒரே ஓய்வூதியம் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்ததில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார்.

ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் பிரதமரின் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தார்.

சும்டோவில் இருந்து திரும்பும்போது அருகாமையிலுள்ள சாங்கோ என்ற கிராமத்தில் இறங்கி, அங்கிருந்த மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார் பிரதமர் மோடி.