பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தீபாவளியை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் தீரமிக்க வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தைரியத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம் என்று குறிப்பிட்டார். நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. அங்கு வீரர்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், குடும்பம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் விழாக்கள் நடைபெறுவதாகக் கூறினார். ஆனால், கடமையின் மீதான பக்தியின் காரணமாக, எல்லையைப் பாதுகாப்பதற்காக பண்டிகை நாளில் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையில், 140 கோடி இந்தியர்களை தங்கள் குடும்பமாக கருதும் உணர்வு பாதுகாப்பு படையினருக்கு ஒரு நோக்க உணர்வை அளிக்கிறது என்று அவர் கூறினார். இதற்காக நாடு உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு ‘தீபம்‘ ஏற்றப்படுகிறது”, என்று அவர் கூறினார். “வீரர்கள் பணியமர்த்தப்படும் இடம் எனக்கு எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல. நீங்கள் எங்கிருந்தாலும் என் திருவிழா அங்கே உண்டு. இது அநேகமாக 30-35 ஆண்டுகளாக நடந்து வருகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.
ராணுவ வீரர்களுக்கும், ராணுவ வீரர்களின் தியாக மரபுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார். “நமது துணிச்சலான வீரர்கள் எல்லையில் வலுவான சுவர் என்பதை நிரூபித்துள்ளனர்”, என்று அவர் கூறினார். “தோல்வியின் தாடைகளில் இருந்து வெற்றியைப் பறித்து நமது துணிச்சலான வீரர்கள் எப்போதும் குடிமக்களின் இதயங்களை வென்றுள்ளனர்” என்று தேசத்தைக் கட்டமைப்பதில் ஆயுதப்படைகளின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் கூறினார். பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் சர்வதேச அமைதிப் பணிகள் குறித்து அவர் குறிப்பிட்டார், அங்கு ஆயுதப்படைகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. “ஆயுதப்படைகள் இந்தியாவின் பெருமையை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அமைதி காக்கும் படையினருக்கான நினைவு மண்டபம் ஒன்றை முன்மொழிந்ததையும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்ட பிரதமர், உலக அமைதியை நிலைநாட்டுவதற்கான அவர்களின் பங்களிப்புகளை அது அழியாததாக மாற்றும் என்றும் கூறினார்.
இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் வெளியேற்றும் பணிகளில் இந்திய ஆயுதப் படைகளின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், சூடானில் ஏற்பட்ட கொந்தளிப்பிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதையும், துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு மீட்புப் பணியையும் நினைவு கூர்ந்தார். “போர்க்களம் முதல் மீட்புப் பணிகள் வரை, உயிர்களைக் காப்பாற்ற இந்திய ஆயுதப் படைகள் உறுதிபூண்டுள்ளன” என்று பிரதமர் கூறினார். நாட்டின் ஆயுதப்படைகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.
தற்போதைய உலக சூழ்நிலையில் இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் பாதுகாப்பான எல்லை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். “இமயமலை போன்ற உறுதியுடன் துணிச்சலான வீரர்களால் அதன் எல்லைகள் பாதுகாக்கப்படுவதால் இந்தியா பாதுகாப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.
கடந்த தீபாவளிக்குப் பிறகு கடந்த ஓராண்டில் நடந்த சாதனைகளை விவரித்த பிரதமர், சந்திரயான் தரையிறக்கம், ஆதித்யா எல் 1, ககன்யான் தொடர்பான சோதனை, உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், தும்கூர் ஹெலிகாப்டர் தொழிற்சாலை, துடிப்பான கிராம பிரச்சாரம் மற்றும் விளையாட்டு சாதனைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். கடந்த ஓராண்டில் உலகளாவிய மற்றும் ஜனநாயக வெற்றிகளைத் தொடர்ந்த பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடம், நரிசக்தி வந்தன் அதினியம், ஜி 20, உயிரி எரிபொருள் கூட்டணி, உலகில் நிகழ்நேர கொடுப்பனவுகளில் முன்னிலை, ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலரைத் தாண்டுதல், உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக மாறுதல், 5 ஜி பயன்பாட்டில் முன்னேற்றம் ஆகியவை குறித்து பேசினார். “கடந்த ஆண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு மைல்கல் ஆண்டாகும்”, என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது, உலகின் இரண்டாவது பெரிய சாலை நெட்வொர்க், மிக நீளமான நதி கப்பல் சேவை, விரைவான ரயில் சேவை நமோ பாரத், வந்தே பாரத் 34 புதிய பாதைகள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம், டெல்லியில் உள்ள இரண்டு உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்கள் – பாரத் மண்டபம் மற்றும் யசோபூமி ஆகியவற்றைக் கொண்ட நாடாக இந்தியா மாறியது. தோர்டோ கிராமத்திற்கு சிறந்த சுற்றுலா கிராம விருது மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன் மற்றும் ஹொய்சாலா கோயில் வளாகம் சேர்க்கப்பட்டுள்ளது.
எல்லைகள் பாதுகாக்கப்படும் வரை நாடு சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபட முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆயுதப்படைகளின் வலிமை, தீர்மானங்கள் மற்றும் தியாகங்களே காரணம் என்று அவர் பாராட்டினார்.
இந்தியா தனது போராட்டங்களிலிருந்து சாத்தியங்களை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், தேசம் இப்போது தற்சார்பு பாரதத்தின் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது என்றார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், உலகளாவிய வீரராக அது உருவெடுத்திருப்பதையும் எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் வலிமை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறினார். முன்பு சிறிய தேவைகளுக்கு நாடு எவ்வாறு மற்றவர்களைச் சார்ந்திருந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார், அதே நேரத்தில் இன்று நட்பு நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 2016 ஆம் ஆண்டில் பிரதமர் இப்பகுதிக்கு விஜயம் செய்ததிலிருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு சாதனை” என்று அவர் மேலும் கூறினார்.
உயர் தொழில்நுட்பம் மற்றும் சி.டி.எஸ் போன்ற முக்கியமான அமைப்புகளின் ஒருங்கிணைப்பைத் தொட்ட பிரதமர், இந்திய ராணுவம் தொடர்ந்து மிகவும் நவீனமாகி வருவதாகக் கூறினார். எதிர்காலத்தில் தேவைப்படும் காலங்களில் இந்தியா இனி மற்ற நாடுகளை நாட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். அதிகரித்து வரும் இந்த தொழில்நுட்ப பரவலுக்கு மத்தியில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மனிதப் புரிதலை எப்போதும் முதன்மையாக வைத்திருக்குமாறு ஆயுதப்படைகளை திரு மோடி வலியுறுத்தினார். தொழில்நுட்பம் ஒருபோதும் மனித உணர்வுகளை மீறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“இன்று, உள்நாட்டு வளங்கள் மற்றும் உயர்தர எல்லை உள்கட்டமைப்பும் நமது பலமாக மாறி வருகின்றன. இதில் பெண்கள் சக்தியும் முக்கிய பங்கு வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். கடந்த ஓராண்டில் 500 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது, ரஃபேல் போர் விமானங்களை இயக்கும் பெண் விமானிகள், போர்க்கப்பல்களில் பெண் அதிகாரிகளை நியமிப்பது குறித்து அவர் குறிப்பிட்டார். ஆயுதப் படைகளின் தேவைகளை கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய பிரதமர், கடுமையான வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகள், ஜவான்களை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் ட்ரோன்கள் மற்றும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) திட்டத்தின் கீழ் 90 ஆயிரம் கோடி செலுத்துவதைக் குறிப்பிட்டார்.
ராணுவ வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வரலாற்றின் திசையை தீர்மானிக்கிறது என்று பிரதமர் ஒரு பாடலை வாசித்து தனது உரையை நிறைவு செய்தார். அதே உறுதியுடன் ஆயுதப்படைகள் பாரத அன்னைக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், “உங்கள் ஆதரவுடன், நாடு தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொடும். நாட்டின் ஒவ்வொரு தீர்மானத்தையும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்’’ என்று கூறினார்.
****
PKV/DL
Marking Diwali with our brave Jawans at Lepcha, Himachal Pradesh. https://t.co/Ptp3rBuhGx
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
The courage of our security forces is unwavering. Stationed in the toughest terrains, away from their loved ones, their sacrifice and dedication keep us safe and secure. India will always be grateful to these heroes who are the perfect embodiment of bravery and resilience. pic.twitter.com/Ve1OuQuZXY
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
Spending Diwali with our brave security forces in Lepcha, Himachal Pradesh has been an experience filled with deep emotion and pride. Away from their families, these guardians of our nation illuminate our lives with their dedication. pic.twitter.com/KE5eaxoglw
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
जहां राम हैं, वहीं अयोध्या है।
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
मेरे लिए जहां देश की सेना और सुरक्षाबल के जवान तैनात हैं, वो स्थान किसी मंदिर से कम नहीं है। pic.twitter.com/oVVQoGpA3e
ऐसा कोई संकट नहीं, जिसका समाधान भारत के पराक्रमी बेटे-बेटियों के पास ना हो। pic.twitter.com/l8OIlJaQkh
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
इसलिए हमें अपनी सेनाओं और जवानों पर गर्व है… pic.twitter.com/MXfjGzsnDl
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
सुरक्षा और समृद्धि की दृष्टि से पिछली दीपावली से पूरे सालभर का समय संपूर्ण राष्ट्र के लिए अभूतपूर्व उपलब्धियों से भरा रहा है। pic.twitter.com/B1l2Ov6JOv
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
अपने बल विक्रम से जो संग्राम समर लड़ते हैं।
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
सामर्थ्य हाथ में रखने वाले, भाग्य स्वयं गढ़ते हैं। pic.twitter.com/ZdGwNNBpjD
अब संकल्प भी हमारे होंगे,
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
संसाधन भी हमारे होंगे।
अब हौसले भी हमारे होंगे,
हथियार भी हमारे होंगे।
गति और गरिमा का
जग में सम्मान होगा।
प्रचंड सफलताओं के साथ,
भारत का हर तरफ जयगान होगा। pic.twitter.com/JB063BMSmM