Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இன்டெல் தலைமை செயல் அதிகாரி பாட் கெல்சிங்கர் உடன் பிரதமர் சந்திப்பு


இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாட் கெல்சிங்கரை சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் குறித்து அவருடன் உரையாடினார். இந்தியா மீதான பாட் கெல்சிங்கரின் நம்பிக்கையை அவர் பாராட்டினார்.

 

இன்டெல் தலைமை செயல் அதிகாரியின் டிவிட்டர் பதிவிற்கு பதில் அளித்த பிரதமர், “உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி @PGelsinger! தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் குறித்து சிறப்பான ஆலோசனைகளை நான் மேற்கொண்டோம். இந்தியா மீதான உங்கள் நம்பிக்கை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

******