Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் செழுமைக்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் செழுமைக்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை


டோக்கியோவில் நடைபெற்ற, இந்தோ-பசிபிக் பொருளாதார செழுமைக்கான கட்டமைப்பை (ஐபிஇஎஃப்) அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேஷியா, கொரிய குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, ஐபிஇஎஃப்-க்குள் உள்ள திட்டமிடப்பட்ட முக்கியக் கூறுகளை எடுத்துகாட்டுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, நேர்மை மற்றும் போட்டி மனப்பான்மை ஆகியவற்றை மேம்படுத்தும் எண்ணத்துடன் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கு ஐபிஇஎஃப் முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஐபிஇஎஃப்-பின் அறிவிப்பு, இந்தோ-பசிபிக் அமைப்பிலுள்ள நாடுகளை உலக அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இயந்திரமாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சியின் அறிவிப்பு என்று தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் நாடுகளிடையேயான வர்த்தக தொடர்புகளில் இந்தியா வரலாற்று ரீதியாகவே முக்கிய பங்காற்றுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிடையேயான பொருளாதார சவால்களை சமாளிக்க பொதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளை கண்டறிய வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.