Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேசிய நாட்டின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் டாக்டர். எச். விரண்டோ பிரதமருடன் சந்திப்பு


இந்தோனேசிய நாட்டின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் டாக்டர். எச். விரண்டோ பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தார்.

டிசம்பர் 2016ல் அதிபர் ஜோகோ விடோடோ இந்தியாவிற்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர் இந்த மாத இறுதியில் அதிபர் ஜோகோ விடோடோவை மறுபடியும் இந்தியாவில் வரவேற்க காத்திருப்பதாக கூறினால். இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள ஏஸியன்-இந்திய நினைவு மாநாட்டில் பங்கேற்க உள்ள ஏஸியன் நாடுகளின் தலைவர்கள் அதன் பின் நடக்கவுள்ள குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்பர்.

கடல்வழி அண்டை நாடுகளாக இருப்பதால் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே உள்ள கடல்சார் பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து உள்ள ஒத்துழைப்பு மேலும் வலுவடைய நிறைய வாய்ப்பு உள்ளதாக பிரதமர் கூறினார். இந்த வகையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா  இடையேயான முதல் பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் வரவேற்றார்.

 ***