Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேசிய அதிபர் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட இந்தியா இந்தோனேஷியா கூட்டறிக்கை

இந்தோனேசிய அதிபர் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட இந்தியா இந்தோனேஷியா கூட்டறிக்கை


இந்திய குடியரசின் பிரதமர் மேதகு திரு.நரேந்திர மோடி அழைப்பின் பேரில் இந்தோனேசிய அதிபர் மேதகு திரு.ஜோக்கோ விடோடோ இந்தியாவில் 2016, டிசம்பர் 11 ம் தேதி முதல் 13ம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் ஜோக்கோ விடோடோ இந்தியாவில் இருதரப்பு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

 

மேதகு அதிபர் ஜோக்கோ விடோடோ இந்திய குடியரசின் குடியரசு தலைவர் மேதகு திரு.பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் 2016 டிசம்பர் 12ம் தேதி அவருக்கு அரசு விருந்து அளிக்கப்பட்டது. பிரதமர் திரு.நரேந்திர மோடியும் அதிபர் ஜோக்கோ விடோடோவும் பரஸ்பரம் அக்கறை உள்ள இருதரப்பு, மண்டல, உலக பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 2015 நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத்தலைவர் திரு.எம். ஹமீது அன்சாரி இந்தோனேசிய அதிபரை சந்தித்தார்.

 

இந்தியாவும் இந்தோனேசியாவும் ஆழமான நாகரீக தொடர்புகள் கொண்ட நட்புடன் கூடிய கடல்சார் அண்டை நாடுகள்  என்றும் இருநாட்டு மக்களிடையே ஆழமான நாகரீக தொடர்புகள் மற்றும் பொதுவான இந்துத்வ, புத்த, இஸ்லாமிய பாரம்பரியங்கள் கொண்டவை என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் அதிபர் விடோடோவும் குறிப்பிட்டனர். அமைதியான நல்லுறவுடன் கூடிய இணைந்த வாழ்க்கையை அடைய பன்முகத்தன்மை, ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி ஆகியவை முக்கியமானவை என்று அவர்கள் வலியுறுத்தினர். இருநாடுகளிடையே நிலவும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு விஷயங்களின் இணைப்பைவரவேற்பதாகவும் இவையே நீண்டகால பாதுகாப்பு பங்களிப்பிற்கு நிலையான அடித்தளம் அமைப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

 

2005 நவம்பரில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு பங்களிப்பை தொடர்ந்து இந்த உறவுகள் இந்த உறவுகள் புதிய வேகத்தை அடைந்துள்ளதாகவும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். 2011 ஜனவரி மாதம் இந்தோனேசிய அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கடைபிடிக்கப்பட்ட “அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்திய இந்தோனேஷிய புதிய பாதுகாப்பு பங்களிப்பின் நெடுநோக்கு” என்ற கூட்டறிக்கை இதற்கு மேலும் வேகம் அளித்தது. 2013ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்ட போது நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான 5 முனை ஒப்பந்தமும் இதற்கு வேகம் அளிக்கிறது. 2014ம் நவம்பர் 13ம் தேதி ஆசியான் உச்சி மாநாட்டின் போது இருதலைவர்களும் முதல் முறையாக சந்தித்தை நினைவு கூர்ந்த அவர்கள் அந்த சமயம் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான விஷயங்கள் விஷயங்கள் குறித்து விவாதித்ததையும் நினைவு கூர்ந்தனர்

 

முக்கியத்துவம் வாய்ந்த உறவுமுறைகள்

இந்தோனேசிய அதிபரும் இந்திய பிரதமரும் பலதரப்பு நிகழ்ச்சிகளின் போது உட்பட ஆண்டு உச்சிமாநாடுகளை நடத்த ஒப்புக்கொண்டனர். முறையான இருதரப்பு ஆலோசனைகளை அமைச்சர்கள் நிலை மற்றும் பணிக்குழு அமைப்புகள் உள்ளிட்டதற்போதுள்ள வலுவான பேச்சுவார்த்தை கட்டமைப்பு மூலம் தொடருவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

நிலக்கரி, விவசாயம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், போதை பொருட்கள் மருந்துகள் மனநிலை மாற்றும் பொருட்கள் ஆகியவற்றில் சட்ட விரோத கடத்தல் எதிர்ப்பு போன்ற கூட்டுப்பணிக்குழு பேச்சுக்களின் முன்னேற்றத்தை வரவேற்பதாக இருதலைவர்களும் தெரிவித்தனர். 2014 நவம்பரில்  நே பையி டா –வில் இரு தலைவர்களுக்குமிடையே நடைபெற்ற முந்தைய கூட்டத்திற்கு இந்த பேச்சுக்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என்றும்  உடன்பாட்டுக்கு உள்ளான கூட்டத்தின் முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று இருதலைவர்களும் கேட்டு கொண்டனர்.

 

இரண்டு ஜனநாயகங்களுக்கு இடையே நாடாளுமன்ற பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இருதலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினார்கள். இரு நாடாளுமன்றங்களுக்கிடையே குழுக்களின் முறையான வருகைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்த வகையில் 2016 ஏப்ரலில் இந்திய நாடாளுமன்ற குழு இந்தோனேஷியாவில் மேற்கொண்ட நல்லெண்ணப் பயணம் அதே போல 2015 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தோனேஷிய குடியரசின் மக்கள் பிரதிநிதித்துவ சபை மற்றும் மண்டலங்களின் பிரதிநிதித்துவ சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் பயணம் செய்தது குறித்துப் பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா இந்தோனேசியா நிபுணர்கள் குழு சமர்ப்பித்த நெடுநோக்கு ஆவணம் 2025 – யை இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்த ஆவணம் 2025 வரையிலும் அதற்கு மேலான காலத்திலும் இருதரப்பு உறவுகளின் எதிர்கால போக்கு குறித்த பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.

 

இஸ்ரோ மூலம் 2015 செப்டம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட லப்பான் ஏ-2, 2016 ஜூன் மாதம் செலுத்தப்பட்ட லாப்பான் ஏ-3 ஆகியவற்றை இருதலைவர்களும் வரவேற்றனர். விண்வெளி குறித்த நான்காவது கூட்டுக்குழுக் கூட்டத்தை லாப்பானும் இஸ்ரோவும் விரைவில் நடத்த வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். இதன் மூலம் விண்வெளியை அமைதி செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவது, அரசுகளுக்கிடையேயான விண்வெளி ஆய்வு ஒப்பந்த கட்டமைப்பு முடிவுகள் விரைவுப்படுத்தப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் நீரியல் ஆய்வு பயன்பாடு, வானிலை ஆய்வு, பேரிடர் நிர்வாகம், பயிர் முன்னறிவிப்பு, ஆதார வரைபடம் தயாரிப்பு, பயிற்சி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களும் விரைவுப்படுத்தப்படும்.

 

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு

பாதுகாப்பு பங்களிப்பவர்களாகவும் கடல்சார் அண்டை நாடுகளாகவும் உள்ள இரு நாடுகளின் தலைவர்களும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள். இந்த வகையில் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுகளையும் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்தையும் விரைந்து நடத்த வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த கூட்டங்களில் தற்போதுள்ள “பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு செயல்பாடுகள் ஒப்பந்தத்தை” ஆய்வு செய்து அதனை விரிவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடாக தரம் உயர்த்த வேண்டும் என்று அவர்கள் பாதுகாப்பு அமைச்சர்களை கேட்டுக் கொண்டனர்.

 

இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ அதிகாரிகள் பேச்சுக்கள்(ஆகஸ்ட் – 2016) கடற்படை அதிகாரிகள் பேச்சுக்கள்(ஜூன்-2015) ஆகியன இருநாடுகளின் பாதுகாப்பு படைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்ட இந்த இரு தலைவர்கள் விமானப்படை அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுக்களை விரைவில் நடத்த ஒப்புக்கொண்டனர். பாதுகாப்பு பரிமாற்றம், பயிற்சி, கூட்டுப்பயிற்சிகள் ஆகியவற்றை அடிக்கடி நடத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டது. பாதுகாப்பு தொழிற்சாலைகள் இடையே தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில்நுட்ப உதவி, திறன் வளர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் இணைந்த கருவிகள் உற்பத்தியை கூட்டாக மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பு குறித்து ஆராயுமாறு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களை தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். 

 

உலக பயங்கரவாதம் மற்றும் பன்னாட்டு குற்றங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல் பற்றி விவாதித்தார் இருதலைவர்களும் பயங்கரவாத எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி தடுப்பு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுதல், ஆயுத கடத்தல், மக்களை கடத்துதல், சைபர் குற்றங்கள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தவும் தீர்மானித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு குறித்து கூட்டுப் பணிக்குழுவை பாராட்டிய அவர்கள் இந்த குழு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய கூட்டத்தின் விளைவுகளை அறிந்து குறிப்பில் எடுத்துக் கொண்டனர். போதைப் பொருட்கள், மருந்துகள், மனநிலையை மாற்றும் பொருட்கள் ஆகியவற்றுக்கு எதிரான கூட்டுப்பணிக்குழுவின் முதல் கூட்டத்தை அவர்கள் வரவேற்றனர். இந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் உறுதியேற்றனர்.

 

புதுதில்லயில் “பேரிடர் அபாய குறைப்பு தொடர்பான ஆசிய அமைச்சர்கள் மாநாடு 2016-யை” வெற்றிகரமாக நடத்தியதை இரு தலைவர்களும் வரவேற்றனர் இந்த துறையில் ஒத்துழைப்பிற்கான திறனை உணர்ந்து தத்தமது தரத்தினர் பேரிடர் நிர்வாக ஒத்துழைப்புக்கு புத்துயிரூட்டி முறையான கூட்டுப்பயிற்சி மற்றும் பயிற்சி ஒத்துழைப்பை நிறுவனப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டனர் இதனால் இயற்கை பேரிடர் காலத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும் திறன் மேம்படும்

 

தத்தமது நாடுகளிலும் சுற்றியுள்ள மண்டலங்களிலும் மற்றும் உலகெங்கிலும் கடல்சார் துறையின் முக்கியத்துவத்தை இந்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கடல்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்த உறுதியேற்ற அவர்கள் இதற்கென இந்த பயணத்தின் போது தனியாக “கடல் சார் ஒத்துழைப்பு அறிக்கையை” வெளியிட்டனர் இந்த அறிக்கையில் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், கடல்சார் பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு விரிவான துறைகள் அடங்கியுள்ளன. இருநாடுகளும் இனம் கண்டுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு சார்ந்த இதர துறைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

 

சட்ட விரோத, கட்டுபாடுகளற்ற, தகவலுக்கு வராத மீன் பிடிப்பை எதிர்க்கவும் தடுக்கவும் தவிர்க்கவும் அகற்றவும் அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளதை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதன் அடிப்படையில் இந்தோனேசியா, இந்தியாவுக்கிடையே சட்ட விரோத, கட்டுபாடுகளற்ற, தகவலுக்கு வராத மீன் பிடிப்பு தொடர்பான கூட்டு அறிக்கை கையெழுத்திடப்பட்டதை வரவேற்றனர். இதன் மூலம் இருநாடுகளுக்கிடையே நிலைத்திருக்கக் கூடிய மீன் வள நிர்வாகம் மேம்படுத்தப்படும். நாடுகளுக்கிடையேயான அமைப்பு சார்ந்த மீன்பிடி குற்றங்களை புதிதாக ஏற்பட்டு வரும் குற்றங்களாக அறிந்திருப்பதாக குறிப்பிட்ட இரு தலைவர்களும் இது உலகிற்கு தொடர்ந்து வளரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றனர்.

 

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு

இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே வர்த்தகம் முதலீட்டு உறவுகள் வளர்ந்திருப்பது பற்றி திருப்தி தெரிவித்த இந்த தலைவர்கள் மேலும் அதிகமான இருவழி வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு வசதி ஏற்படுத்த வெளிப்படையான, விளைவுகள் தெரிந்திருக்கக்கூடிய, பொருளாதார கொள்கை கட்டமைப்பு அவசியம் என்றும் இதனால் தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்றும் கூறினர்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையான வர்த்தக அமைச்சர்கள் அமைப்பு கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டும் என்று இந்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்த அமைப்பு பொருளாதார கொள்கைகள் தொடர்பாக தேவைப்படும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான இடையூறுகள் அகற்றப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

 

“இந்தியாவில் தயாரிக்கும்” “டிஜிட்டல் இந்தியா” “திறன் இந்தியா” “துாய்மை பாரதம்” “தொடங்கிடு இந்தியா” “அதிநவீன நகரங்கள்” போன்ற புதுமைத் திட்டங்கள் மூலம் இந்தியாவை மாற்றியமைக்க தனது அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அதிபர் விடோடோவிடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இவற்றின் மூலம் ஏற்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தோனேசிய வர்த்தகர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தோனேஷியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய சீர்த்திருத்தங்கள் மற்றும் வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் நடவடிக்கைகள் மேம்பாடு, ஆகியவை குறித்து அதிபர் விடோடோ பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். இந்திய நிறுவனங்கள் தமது நாட்டில் மருந்துப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்சக்தி, உற்பத்தித் தொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

புதுதில்லியில் 2016 டிசம்பர் 12-ல் நடைபெற்ற இந்தியா-இந்தோனேசியா முதன்மை நிர்வாக அலுவலகர்கள் அமைப்பின் கூட்டத்தின் முக்கியமான வர்த்தக தலைவர்கள் கலந்து கொண்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்த அமைப்பு முறையாக ஆண்டுதோறும் கூடி இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் உயர்த்துவதற்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 2016 டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற இந்தோனேஷியா மற்றும் இந்தியா நாடுகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை நிர்வாக அலுவலகர்கள் கூட்டத்தின்போது மேற்குறித்த அமைப்பின் 2016 டிசம்பர் 12ம் தேதி கூட்டத்தின் இணைத்தலைவர்களின் அறிக்கை அதிபர் ஜோக்கோ விடோடோவிடம் வழங்கப்பட்டது.

 

இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு நம்பகத்தன்மை உள்ள, துாய்மையான குறைந்த விலை மின்சக்தி ஆகியவை கிடைப்பது மிகவும் முக்கியமானது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டு இந்த வகையில் 2015 நவம்பரில் புதிய, புதுப்பிக்கக் கூடிய மின்சக்தி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை வரவேற்றனர். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை ஊக்குவிக்க கூட்டுப்பணிக்குழு உருவாக்க வேண்டுமென்றும் இதன் முதலாவது கூட்டத்தை விரைவாக கூட்டி உறுதியான இருதரப்பு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 

புதுப்பிக்கக் கூடிய மின்சாரத் துறையில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளை, குறிப்பாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு ஏற்படுத்தியதை அதிபர் விடோடோ வரவேற்றார்.

 

2015 நவம்பரில் நடைபெற்ற நிலக்கரி குறித்த கூட்டுப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தின் விளைவுகளை அவர்கள் அறிந்து கொண்டனர். மின்சார சிக்கன தொழில் நுட்பங்கள், புதிய புதுப்பிக்கக்கூடிய மின்சார தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமென்று ஒப்புக்கொண்ட இரு தலைவர்களும் மின்சார பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், தத்தமது பருவமாற்ற இலக்குகளை அடைவதற்குமான பகிர்ந்துக் கொண்ட உள்ளக்கிடக்கைளுடன் இது சாத்தியாமாகும் என்று அவர்கள் கூறினர்.

 

எதிர்காலத்தின் மின்சார தேவைகள் குறித்த கலவையை எதிர்கொள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வாயு துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதையும், இது தொடர்பான கூட்டுப்பணிக்குழுவை செயல்படுத்துவதையும் ஊக்குவித்தனர். விரைவில் இத்துறையில் ஒத்துழைப்பு நோக்கங்கள் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

பொதுவான சுகாதார சவால்களை சமாளிப்பதில் நெருங்கிய ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் சுகாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதனை எதிர்நோக்கி இருப்பதாக இருதலைவர்களும் தெரிவித்தனர். மருந்துகள் துறையில் பரஸ்பரம் பயனுள்ள ஒத்துழைப்பை இருதரப்பும் விரிவாக்க வேண்டுமென்றும் அவர்கள் ஊக்கப்படுத்தினர்.

 

இருநாடுகளின் மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்த தலைவர்கள் இதில் திடமான நடவடிக்கைகளை எடுப்பதில் இணைந்து பாடுபட ஒப்புக்கொண்டனர். இந்தோனேசியாவின் தேவைகளை சந்திக்க அரிசி, சர்க்கரை, சோயா,மொச்சை ஆகியவற்றை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தகவல், தொழில் தொடர்பு தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளையும் சவால்களையும் உணர்ந்துள்ளதாக தெரிவித்த இரு தலைவர்களும் இந்த துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தி அதன் மூலம் புதுமை படைத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்க ஆதரவு அளிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

 

வர்த்தகம், சுற்றுலா, இருநாட்டு மக்களின் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் பயணவசதியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக் காட்டிய இந்த தலைவர்கள் 2016 டிசம்பர் முதல் இந்தோனேஷிய விமான நிறுவனம் கருடா ஜகார்தாவிற்கும் மும்பைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கியிருப்பதை வரவேற்றனர். இந்திய விமான நிறுவனங்கள் இந்த நேரடி சேவையை தொடங்குவதையும் அவர்கள் வரவேற்றனர். நேரடி கப்பல் போக்குவரத்து தொடர்புகள், துறைமுக, விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்களில்  தனியார் துறை முதலீடு மற்றும் இதர சலுகைத் திட்டங்களில் பொதுத்துறை தனியார் துறை பங்களிப்பு ஆகியவற்றின் மேம்பாடுகளை இருநாடுகளும் ஊக்குவிக்கின்றன. இருநாடுகளுக்குமிடையே வர்த்தக வசதிகளை ஏற்படுத்த தரம் சார்ந்த துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை இருதலைவர்களும் வலியுறுத்தினர். இந்த வகையில் இந்தோனேசியா தேசிய தரப்படுத்தும் முகைமை மற்றும் இந்திய தரங்கள் அமைப்பு ஆகியவற்றின் இடையே தரப்படுத்தல் ஒத்துழைப்பை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அவர்கள் வரவேற்றனர்.

 

பண்பாடு மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகள்

2015-2018 ஆண்டுகளுக்கான பண்பாட்டு பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் கலை, இலக்கியம், இசை, நாட்டியம், தொல்லியல் ஆய்வு ஆகியவற்றின் மூலம் இருநாட்டு மக்களுக்கு இடையே ஏற்கனவே நிலவும் வரலாற்று பண்பாட்டு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி அளித்தனர். இளைஞர்களிடையே திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றின் சிறப்புகளை உணர்ந்திருப்பதாக குறிப்பிட்ட தலைவர்கள் திரைப்பட தொழில்துறையில் ஒத்துழைப்பிற்கான உடன்பாட்டை இறுதி செய்ய ஒப்புக் கொண்டனர்.

இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் இளைய தலைமுறைக்கு ஆற்றல் அளிப்பதில் கல்வி மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் முதலீடுகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆசிரியர்கள் பரிமாற்றம், ஆசிரியர்கள் பயிற்சி, இரட்டை பட்ட படிப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்க தற்போது ஏற்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு பல்கலைகழகத்திலிருந்து மற்றொரு பல்கலைகழகத்திற்கு என்ற இணைப்பாக நிறுவனப்படுத்தப்படுவதை இருதரப்பினரும் கருத்தில் கொண்டனர். உயர்கல்வி துறையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியம் இருதலைவர்களும் வலியுறுத்தினார்கள் இந்த வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

 

பல்வேறு இந்தோனேசிய பல்கலைகழகங்களில் இந்திய ஆய்வு இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதை இருதலைவர்களும் வரவேற்றனர் இதே போல இந்திய பல்கலைகழகங்களில் இந்தோனேசிய ஆய்வு இருக்கைகள் உருவாக்குவது பற்றி ஆராய ஒப்புக்கொண்டனர்.

 

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பும் ஒப்புதல் அளித்தது இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதை வரவேற்றது.

 

பொது சவால்களுக்கு பதில் அளிப்பதில் ஒத்துழைப்பு

பயங்கரவாதத்தை அதன் எல்லா வடிவங்களிலும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த இருதலைவர்களும் பயங்கரவாத செயல்களை பூஜ்ய நிலை பொறுத்துக் கொள்ளும் கொள்கையை வலியுறுத்தினர். வளர்ந்து வரும் பயங்கரவாதம், வன்முறையான தீவிரவாதம் மற்றும் இவை உலகெங்கும் விரிந்திருப்பது ஆகியவை குறித்து இருதலைவர்களும் மிகுந்த கவலை தெரிவித்தனர். அனைத்து நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு சபையின் 1267 வது தீர்மானத்தையும் அது தொடர்பான இதர பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் தீர்மானங்களை அமல்படுத்த வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் மற்றும் அவர்களது அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அகற்றுவதிலும், பயங்கரவாத கட்டமைப்புகள், நிதி கிடைக்கும் வழிகள் ஆகியவற்றை குலைத்து எல்லைக்கப்பால் இருந்து வரும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதிலும் அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். தங்கள் பகுதிகளிலிருந்து செயல்படம் பன்னாட்டு பயங்கரவாதத்தை திறன்மிக்க குற்றவியல் நீதிமுறைகள் மூலம் அனைத்து நாடுகளும் கையாள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இந்த வகையில் இருநாடுகளுக்கிடையே கூடுதலான ஒத்துழைப்பு, அதிக அளவிலான தகவல் பரிமாற்றம், வேவுத் தகவல் பரிமாற்றம் ஆகியன நடைபெறுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

 

ஐ.நா வின் கடல்சார்ந்த சட்டங்கள் சார்ந்த உடன்பாட்டில் குறிப்பிட்டப்படியும் சர்வதேச சட்டக் கொள்கைகள் அடிப்படையிலும் கடல் மற்றும் ஆகாய வழிப்போக்குவரத்து சுதந்திரம் மற்றும் தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம் ஆகியவற்றில் தங்களுக்குள்ள உறுதிபாட்டை இருதலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். இந்த வகையில் அனைத்து தரப்பினரும் அமைதியான வழிகளில் தங்களுக்கு இடையேயான தாவாக்களுக்கு தீர்வு காண வேண்டுமென்றும் அச்சுறுத்தல்கள், படை உபயோகம் ஆகியவற்றை தவிர்த்து சுயகட்டுப்பாட்டை பயன்படுத்தி செயல்பாடுகளை நடத்த வேண்டுமென்றும், பதற்றங்களை ஏற்படுத்தும் ஒருதரப்பான செயல்களைத் தவிர்க்குமாறு அவர்கள் தெரிவித்தனர். கடல் மற்றும் சமுத்திரம் சார்ந்த சர்வதேச சட்ட அமைப்பை உருவாக்கி உள்ள ஐ.நா சட்ட அமைப்புக்கு அதிக மரியாதை செலுத்தி நடந்து கொள்ள வேண்டுமென்று அனைத்து தரப்பினரையும் இருதலைவர்களும் கேட்டுக் கொண்டனர். தென் சீனக் கடல் குறித்த தாவாக்களை அமைதியான வழிகளில் தீர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இரண்டு தலைவர்களும் ஐ.நா சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச சட்டக் கொள்கைகளை ஏற்று அவற்றின்படி செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

மண்டல விரிவான பொருளாதார பங்களிப்பு பேச்சுக்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டியதன் அவசியத்தை இருதரப்பினர்களும் வலியுறுத்தினார்கள். ஐ.நா மற்றும் அதன் முக்கிய அங்கமான பாதுகாப்பு சபை ஆகியவற்றில் நடைபெற்றுவரும் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவை மீண்டும் தெரிவித்துக் கொண்ட இருதலைவர்களும் இதனால் ஐ.நா மேலும் ஜனநாயகம் கொண்டதாகவும் வெளிப்படையானதாகவும் திறம்பட செயல்படக் கூடியதாகவும் மாறி இன்றைய உலகின் எண்ணிலடங்கா சவால்களை எதிர்கொள்ளும் திறன் என்று அவர்கள் கூறினர். ஐ.நா பாதுகாப்பு சபை தனது முடிவு மேற்கொள்ளும் நடைமுறையை அதிக அளவு ஜனநாயகம் கொண்டதாக மாற்றுவதற்க அதனை விரைவாக சீரமைப்பது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர். இத்தகைய சீர்த்திருத்தத்தின் போது வளரும் நாடுகள் போதுமான அளவில் நிரந்தர உறுப்பினர்களாக இடம் பெறுவது அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஐ.நா சீர்த்திருத்தம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நெருங்கி ஒத்துழைப்பதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

உலகலாவிய பொருளாதார சீர்மை வேகத்தை அதிகரிக்கவும் பருவநிலை மாற்றத்திலும் சர்வதேச சமுதாயம் எதிர் நோக்கியுள்ள சவால்களை உணர்ந்திருப்பதாக குறிப்பிட்ட இருதரப்பும் பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவும் இந்தோனேசியாவும் நெருங்கி பாடுபட வேண்டுமென்று ஒப்புக்கொண்டன.

 

ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை தொடர்புகளில் கடந்த 24 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சீரான வளர்ச்சி குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தை தொடர்புகளின் 25வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையிலும் 2017ம் ஆண்டு பாதுகாப்பு பங்களிப்பின் ஐந்தாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இந்தியாவிலும் ஆசியான் உறுப்பு நாடுகளிலும் 2017ம் ஆண்டு முழுவதும் நினைவு நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதை அவர்கள் வரவேற்றனர். இந்த நடவடிக்கைகளில் கீழ்க்கண்டவை அடங்கும்: இந்தியாவில் நினைவு உச்சிமாநாடு, அமைச்சர் நிலைக் கூட்டங்கள், வர்த்தக மாநாடுகள், பண்பாட்டு விழாக்கள் ஆசியான் தொடர்பான கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, ஆசியான் மண்டல அமைப்பு, ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் ப்ளஸ், போன்றவற்றை நடத்துவதில் தொடர்ந்து நெருங்கி ஒருங்கிணைப்பது என இருதரப்பும் ஒப்புக் கொண்டது.

 

இந்தியப் பெருங்கடலின் இருப்பக்கங்களில் அமைந்துள்ள இரண்டு பெரிய நாடுகளான இந்தியாவும் இந்தோனேசியாவும் இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டை உறுதிச் செய்வதில் முக்கிய கடமை கொண்டவை என்று குறிப்பிட்ட இருதலைவர்களும் இதனால் இந்த அமைப்பு அடையாளம் கண்டுள்ள துறைகளில் மண்டல ஒத்துழைப்பு வளரவும், இந்தியப் பெருங்கடல் கப்பற்படை மாநாடு வெற்றி பெறவும் பேருதவியாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் தலைவராக இந்தோனேஷியா பொறுப்பேற்றுள்ளதற்கும் அதன் முதலாவது உச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டிருப்பதற்கும் அதிபர் விடோடோவை பிரதமர் மோடி பாராட்டினார்.

 

தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை தொடர்ந்து கண்காணிக்க இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 2017ம் ஆண்டு முதல் பாதியில் கீழ்க்கண்ட அமைப்புகளின் கூட்டங்களை நடத்தி இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்லவும் ஒப்புக்கொண்டனர்.

 

  1. அமைச்சர்கள் நிலை கூட்டுக்குழு
  2. பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுக்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டுக்குழு
  3. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையான வர்த்தக அமைச்சர்கள் அமைப்பு
  4. மின்சார ஒத்துழைப்பிற்கான காலக்கெடு வரைபடம் தயாரிப்பதற்கு மின்சார அமைப்பின் கூட்டத்தை நடத்துதல்
  5. பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய விரிவான செயல் திட்டத்தை உருவாக்க பாதுகாப்பு பேச்சுக்கள் அமைப்பை ஏற்படுத்த

 

பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசியாவிற்கு விரைவில் வருகை தருமாறு அதிபர் விடோடோ அழைப்பு விடுத்தார் இந்த அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக் கொண்டார்.