Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும்  ஜி20 உச்சிமாநாட்டின் இடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

பதவியேற்றதை முன்னிட்டு அதிபர் சுபியாண்டோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். விரிவான உத்திசார் கூட்டாண்மையின் கட்டமைப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, இணைப்பு, சுற்றுலா, சுகாதாரம், மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்த நிகழ்வை பொருத்தமான முறையில் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தனர்.

உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஜி20 அமைப்புக்குள் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து விவாதித்த அவர்கள், உலகளாவிய தெற்கின் கவலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க அழைப்பு விடுத்தனர். ஆசியான் உள்ளிட்ட பலதரப்பு மற்றும் பன்முக அரங்கங்களில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

***

(Release ID: 2074440)
TS/PKV/RR/KR