Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தூர் விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர்


இந்தூரில் நிகழ்ந்த விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் திரு  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அங்குள்ள நிலைமை குறித்து மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹானிடம், பிரதமர் திரு மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார். 

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தூர் விபத்து சம்பவம் மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அங்குள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் @சிவ்ராஜ் சவ்ஹான் அவர்களிடம் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இந்த தருணத்தில் எனது பிரார்த்தனைகள் உடனிருக்கும்”

***

(Release ID: 1912201)

AD/ES/KPG/KRS