Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிதி மறுகட்டமைப்பு மற்றும் இதனை தேசிய கட்டிட கட்டுமான கழக நிறுவனம் கையகப்படுத்துதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் (எச்.எஸ்.சி.எல்.) நிதி மறுகட்டமைப்புக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும், இதை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிட கட்டுமான கழக நிறுவனம் (என்.பி.சி.சி.) கையகப்படுத்தவும் கொள்ளவும் ஒப்புதல் வழங்கி உள்ளது.

எச்.எஸ்.சி.எல்.லின் தற்போதுள்ள செலுத்து பங்கு மூலதனம் ரூ.1,171.10 கோடி. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் திட்டமில்லா கடன் மற்றும் திட்டக் கடன் ஆகியவற்றுடன் கூட்டு வட்டி ஆகியவற்றுடன் அதன் மீது மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள உத்தரவாதத் தொகை ரூ.1,502.20 கோடியை, இந்நிறுவனத்தின் பங்கு மற்றும் பங்கு மூலதனமாக உயர்த்துதல். இதன் மூலம் நிறுவனத்தின் செலுத்து பங்கு மூலதனம் ரூ.1,619.30 கோடியாகும். இதற்கு எதிராக, 31.3.2015ம் வரையிலான கூட்டு நஷ்டமான ரூ.1,585 கோடி தள்ளுபடி செய்யப்படும். கூட்டு நஷ்டத்தை தள்ளுபடி செய்தபின்னர், எச்.எஸ்.சி.எல் லின் பங்கு மற்றும் செலுத்து மூலதனம் ரூ.34.30 கோடியாக இருக்கும். என்.பி.சி.சி. ரூ.35.70 கோடி நிதியை எச்.எஸ்.சி.எல்.லின் பங்காக உட்செலுத்தும். 51 சதவீத பங்குகளை வைத்திருப்பதன் மூலம் என்.பி.சி.சி.யின் துணை நிறுவனமாக எச்.எஸ்.சி.எல் மாறும். எச்.எஸ்.சி.எல் லில் மத்திய அரசின் பங்கு 49 சதவீதமாக குறைக்கப்படும். இதன் மூலம் எச்.எஸ்.சி.எல்.லின் பங்கு மற்றும் செலுத்து மூலதனம் ரூ.70 கோடியாக இருக்கும்.

ஒத்த வர்த்தக நடவடிக்கைகளுடன் என்.பி.சி.சி. மற்றும் எச்.எஸ்.சி.எல் ஆகியவை மத்திய அரசின் நிறுவனங்கள். இந்த நடவடிக்கை மூலம், என்.பி.சி.சி.யின் பொருளாதார அளவீட்டில் பலன் ஏற்படும் மற்றும் மனித ஆற்றலை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். என்.பி.சி.சி. மற்றும் எச்.எஸ்.சி.எல் ஆகியவை ஒன்றுக்கொன்று அடுத்தவற்றின் ஆதாரங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களும் பலனடைய முடியும். எச்.எஸ்.சி.எல் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், ஆர்டர்களை நிறைவேற்றுவதிலும் தன்னுடைய ஈடுபாட்டை முழுமை அடையச் செய்ய முடியும்.

வர்த்தக வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கால அளவிலான கடனை அடைப்பதற்காக ஒரு முறைக்கான ஆதரவாக மத்திய அரசு ரூ.200 கோடியை வழங்கும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வி.ஆர்.எஸ். திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.110 கோடியையும் (தோராயமாக) மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். கூடுதலாக, 2015&16ம் நிதியாண்டுக்கு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டி நிலுவைத் தொகை தோராயமாக ரூ.44 கோடியையும் (31.03.2016 வரையில்) மத்திய அரசு செலுத்தும். மேலும், எச்.எஸ்.சி.எல்லை கையகப்படுத்திக் கொள்வதன் மூலம் நடப்பு நாள் வரையிலான வட்டியை என்.பி.சி.சி. செலுத்தும்.

பின்னணி :

எச்.எஸ்.சி.எல் நிறுவனம், ஒருங்கிணைந்த நவீன எஃகு ஆலைகள் கட்டுமானத்துக்காக கடந்த 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது. காலப்போக்கில் இந்நிறுவனம், சிவில் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட ஆரம்பித்தது. 1978&79ல் இருந்து இந்நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தொழிலாளர் சக்தியை இழுத்துக் கொண்டதுதான். 1970ல் 4,100 ஆக இருந்த தொழிலாளர் சக்தி, 1979ல் 26,537 ஆகி இருந்தது. எச்.எஸ்.சி.எல் ஊக்குவிப்பு திட்டம் மத்திய அரசால் 1999ம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், கூடுதலாக இந்நிறுவனத்தின் நிதி சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் வெற்றி பெறவில்லை.

ஜூலை, 2015ல் செயலாளர்கள் குழு செய்த பரிந்துரையில், எச்எஸ்சிஎல் நிறுவனத்தின் மத்திய அரசின் வேறொரு பொதுத்துறை நிறுவனத்துடன் இணைப்பது குறித்த வாய்ப்புகளை மத்திய எஃகு அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எச்எஸ்சிஎல் தொடர்பான பரிந்துரைக்காக செயலாளர்கள் குழு (ஜிஓஎஸ்) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஜி.ஓ.எஸ்.சின் பரிந்துரை மற்றும் இதுதொடர்பான ஒருமித்த கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், எச்.எஸ்.சி.எல். நிதி மறுகட்டமைப்பு மற்றும் என்.பி.சி.சி. அதை எடுத்து கொள்ளுதல் தொடர்பாக அமைச்சரவை குறிப்பு தயாரிக்கப்பட்டது.