Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்துஸ்தான் ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பரோனி கிளையை விரைவாக மீண்டும் செயல்பட வைக்க நிதி மறுகட்டமைப்பு


நிறுவனத்திற்கு மீண்டும் நிதிக் கட்டமைப்பை ஏற்படுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் இதர விஷயங்களுடன் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய 1916.14 கோடி (31.3.1015 வரையிலானது) கடன் மற்றும் இந்திய அரசுக்கான கடனுக்கு அளிக்க வேண்டிய வட்டி (31.3.2015 வரை 7163.35 கோடி) நீக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பரோனி கிளைக்குச் சொந்தமான 56 ஏக்கர் சாம்பல் கொட்டி வைக்கப்படும் நிலத்தை பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவனத்திற்கு மாற்றம் செய்து ஹெச்.எப்.சி.எல் நிறுவனத்தை விரைவாக மீண்டும் செயல்பட வைக்கும் வகையில் அதன் கடன்களை தீர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவையின் இந்த ஒப்புதல் ஹெச்.எப்.சி.எல். நிறுவனத்தின் நிகர மதிப்பை நேர்மறையாக்கி பி.ஐ.எஃப்.எல். பதிவில் இருந்து நீக்க உதவும். ஹெச்.எப்.சி.எல். நிறுவனத்தின் பரோனி கிளையை விரைவாக மீண்டும் திறப்பதற்கு இது வழி ஏற்படுத்திக் கொடுக்கும். கடந்த ஜனவரி 1999 முதல் இந்தக் கிளை செயல்படாமல் உள்ளது. இதனால் இந்தக் கிளை மற்றும் அதனைச் சார்ந்த வசதிகள் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அசாமில் உள்ள நம்ரூப்பில் உள்ள சிறிய யூரியா தொழிற்சாலை தவிர வேறு எந்த யூரியா தொழிற்சாலையும் நாட்டின் கிழக்கு பகுதியில் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டின் வருடாந்திர யூரியா நுகர்வு சுமார் 320 எல்.எம்.டி.யாக இருப்பதுடன், இதில் 245 எல்.எம்.டி. மட்டும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு எஞ்சியவை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. பரோனியில் புதிய தொழிற்சாலை செயல்படுவது பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட்டில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும். மேலும் இது மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இருந்து யூரியா அனுப்படுவதால் இது ரயில்வே மற்றும் சாலை கட்டமைப்பில் அழுத்தத்தை போக்கி அதன் மூலம் சரக்கு போக்குவரத்துக்கான மாநிலம் குறைவதால் நாட்டுக்கு பெரும் தொகை மிச்சமாகும். மேலும் இந்த ஆலை 400 பேருக்கு நேரடி மற்றும் 1200 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும்.

மேலும் இந்த பரோனி தொழிற்சாலை கெயில் நிறுவனத்தால் நிறுவப்படும் ஜகதீஷ்பூர் – ஹல்திய எரிவாயு குழாய் திட்டத்தில் முக்கியமாக இருக்கும். கிழக்கு இந்தியாவில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இது முக்கியமாக திகழும்.