Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய வியட்நாம் கூட்டு அஞ்சல் தலைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை புதன்கிழமை கூடியது. அதில், இந்திய அஞ்சல் துறையும் வியட்நாம் அஞ்சல் துறையும் கூட்டாக அஞ்சல் தலை வெளியிடுவது குறித்து விவரிக்கப்பட்டது.

மத்திய தகவல் அமைச்சகத்தின் கீழ் அஞ்சல் துறையும் வியட்நாம் நாட்டின் வியட்நாரா அஞ்சல் துறையும் இணைந்து “பாரம்பரிய கட்டடக்கலை” என்ற கருத்தியலில் இந்திய – வியட்நாம் அஞ்சல் தலையைக் கூட்டாக வெளியிடுவதற்கு இசைந்தன. இந்த கூட்டு அஞ்சல் தலைகள் 2018, ஜனவரி 25-ம் தேதி வெளியிடப்பட்டன.

இந்தியா – வியட்நாம் குறித்த இந்த நினைவு அஞ்சல்தலைகள் இந்தியாவின் சாஞ்சி ஸ்தூபியையும், வியட்நாமில் உள்ள போ மின் பகோடாவையும் (Pho Minh Pagoda) சித்திரிக்கின்றன. இது தொடர்பாக இந்திய வியட்நாம் நாடுகளின் அஞ்சல் துறைகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 2017, டிசம்பர் 18ம் தேதி கையெழுத்தானது.

*****