Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங்கை மருத்துவமனைக்கு பிரதமர் நேரில் சென்று பார்த்தார்; விரைவாக குணம் பெற வாழ்த்தினார்.


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், ஆர்.&ஆர். மருத்துவமனையில் மோசமான உடல்நிலை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின் மார்ஷல் அர்ஜன் சிங்கை நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்த பிரதமர், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

“மோசமான உடல்நிலை காரணமாக தில்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங்கை நேரில் சென்று பார்த்தேன். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன்.

இந்திய விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங் விரைவில் குணம் பெற நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம். மருத்துவர்கள் அவர்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்”, என பிரதமர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

****