Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


விண்வெளி ஆய்வுகள் மற்றும் அமைதியான நடவடிக்கைகளுக்கு விண்வெளியின் வெளிப்புறத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், ஐக்கிய அரபு எமிரேட் விண்வெளி முகமையும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமாக இஸ்ரோ மற்றும் ஐக்கிய அரபு எமிரோட் விண்வெளி முகமையின் உறுப்பினர்கள் கொண்ட கூட்டு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு உள்ளிட்ட செயல் திட்டத்தை வகுக்கும்.

பின்னணி :

கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் இந்திய பிரதமரின் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான பயணத்தின் போது இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு குறித்துப் பேசப்பட்டது. மேலும் செப்ம்பர் 2015ல் புதுதியில் நடைபெற்ற இந்தியா-யுஏஇ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 11 கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் விண்வெளிக் குழுவின் பிரதிநிதிகள் குழு இஸ்ரோவின் தொழில்நுட்ப வசதிகளுக்கு செப்டம்பர் 16, 2015 அன்று விஜயம் செய்து விண்வெளி ஒத்துழைப்பு குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்தும் பேச்சுக்கள் நடத்தினார்கள். இதன்படி இஸ்ரோ மற்றும் யு.ஏ.இ.எஸ்.ஏ. தங்களது பரஸ்பர ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு புதுதில்லியில் பிப்ரவரி 11, 2016 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.