இந்திய ராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் 12 சுவாதி என்ற ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்கள் (சமவெளி) ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக ரூ. 9100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் 30, 2023 அன்று கையெழுத்திட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தின் ட்விட்டர் பதிவு தெரிவித்தது.
இந்திய பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியதாவது:
“தற்சார்பு நிலையை ஊக்குவிக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு உதவிகரமாக இருக்கும்.”
***
(Release ID: 1912404)
AD/BR/RR
A welcome development, which will boost self-reliance and particularly help the MSME sector. https://t.co/9rQU2tg0qP
— Narendra Modi (@narendramodi) March 31, 2023