Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கணக்காளர் நிறுவனத்திற்கும் இடையே 2008ஆம் ஆண்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான, நிகழ்வுக்கு பிந்தைய ஒப்புதலுக்கும்


இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கணக்காளர் நிறுவனத்திற்கும் இடையே 2008ஆம் ஆண்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான நிகழ்வுக்கு பிந்தைய ஒப்புதலுக்கும் 2014ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதற்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயன்கள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவைச் சேர்ந்த பல இளம் பட்டயக் கணக்காளர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தொழில் சார்ந்த அங்கீகாரத்தைப் பெறவும் மேலும் இங்கிலாந்தில் தொழில்சார்ந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளவும் உதவும்.

*****