இந்திய பட்டய கணக்காளர் கழகம்(ICAI) மற்றும் அசர்பைஜான் குடியரசு தணிக்கையாளர்கள் சபை (CAAR) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உறுப்பினர்கள் மேலாண்மை, தொழில் நெறிமுறைகள், தொழில்நுட்ப ஆராய்ச்சி, அக்கவுண்டன்சி பயிற்சி, தணிக்கை தரவு கண்காணிப்பு, கணக்கியல் அறிவின் முன்னேற்றம், தொழில்முறை மற்றும் அறிவுசார் வளர்ச்சி ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவும்.
இந்த ஒப்பந்தம் மூலம் நாடு முழுவதும் நடுத்தர நிலையில் உள்ள ஐசிஏஐ உறுப்பினர்கள், ஒரு நாட்டின் அந்தந்த அமைப்புகளின் முடிவுகள், கொள்கை உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இரு நாடுகளின் கணக்கியல் துறையில் பின்பற்றப்படும் புதுமையான முறைகள், தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்த முடியும்.
ஐசிஏஐ நெட்வொர்க் 45 நாடுகளில் 69 நகரங்களில் உள்ளது. அன்னிய முதலீட்டை கவர, வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை இந்தியா பின்பற்ற முடியும். அசர்பைஜான் நாட்டுடனான கூட்டுறவை வலுப்படுத்தி, கணக்கியல் தொழில் சேவைகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753116