இந்திய நிலக்கரி நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்ட துணை நிறுவனங்களுக்கு 01.01.2007 முதல், 2007ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் திட்டத்திற்கு செயலாளர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதின் அடிப்படையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் மற்ற துணை நிறுவனங்களுக்கு செயல்திறன் இணைந்த ஊதியத்தை தொழிற்சங்கங்களை சாராத மேற்பார்வையாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு அளிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் பெற்ற லாபத்தை ஒன்றிணைத்து இந்த ஊதியம் வழங்கப்படும். இந்திய நிலக்கரி நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்ட துணை நிறுவனங்களின் இழப்புகள் சரி செய்யப்பட்டு சில துணை நிறுவனங்களில் இருந்து கிடைத்த பங்குகளில் இருந்து கிடைத்த ஈவுத்தொகையை தவிர்த்து லாபம் மட்டும் கணக்கிடப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கான லாபத்தொகையில் இருந்து செயல்திறனுடன் இணைந்த ஊதியம் வழங்கப்படும். ஒரு ஆண்டில் கிடைக்கும் லாபம் அடுத்த ஆண்டிற்கு சேர்க்கப்பட மாட்டாது.
இதன் மூலம் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் நிர்வாகிகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றப்படும் போது சரி சமமான நிலை ஏற்படும்.
பின்னணி:
1975 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய நிலக்கரி நிறுவனம் இந்திய அரசால் துவக்கப்பட்டது. இதில் ஐந்து துணை நிறுவனங்கள் உள்ளன. இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் எட்டு துணை நிறுவனங்கள் ஆகியவற்றில் நியமனம், ஊழியர்கள் மாற்றம் போன்ற நிர்வாகிகள் குறித்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்திய நிலக்கரி நிறுவனம் மட்டும் முடிவு செய்யும். இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிநிலை பொதுவானதாகவும், அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஊழியர்களாகவே கருதப்படுவார்கள்.
Prime Minister’s Office11-October, 2015 10:10 IST