Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த லலித் ராம் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த திரு.லலித் ராம் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரை வாயிலாக திரு.மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த லலித் ராம் அவர்களின் மறைவை அறிந்து துயருற்றேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது அளப்பரிய பங்களிப்பையும், துணிச்சலையும் என்றும் மறக்க இயலாது. அவருடனான உரையாடல்களை நான் நினைவு கூர்கிறேன். அவரைப் போன்ற அரிய மனிதர்கள் இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தை பதித்துச் செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

***