Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் மேலும் ஒரு செமிக்கண்டக்டர் அலகுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


துடிப்பான செமிகண்டக்டர் சூழலியல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் சனந்த் நகரில் ஒரு செமிகண்டக்டர் அலகை நிறுவுவதற்கு கெய்ன்ஸ் செமிகான் தனியார் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.3,300 கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சில்லுகள் (சிப்புகள்) ஆகும்.

இந்தப் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் சில்லுகள் தொழில்துறை, வாகன, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணுவியல், தொலைத்தொடர்பு, மொபைல் போன்கள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான பயன்பாடுகளைப் பூர்த்தி செய்யும்.

இந்தியாவில் செமிகண்டக்டர்கள் மற்றும் காட்சி உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் 21.12.2021 அன்று ரூ.76,000 கோடி மொத்த ஒதுக்கீட்டில் அறிவிக்கை செய்யப்பட்டது.

2023, ஜூன் மாதத்தில் குஜராத்தின் சனந்தில் ஒரு செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான முதல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2024, பிப்ரவரி-யில், மேலும் மூன்று செமிகண்டக்டர் அலகுகள் அங்கீகரிக்கப்பட்டன. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத்தின் தோலேராவில் ஒரு செமிகண்டக்டர் ஃபேப் மற்றும் அசாமின் மோரிகானில் ஒரு செமிகண்டக்டர் அலகை அமைக்கிறது. சிஜி பவர் குஜராத்தின் சனந்தில் ஒரு செமிகண்டக்டர் அலகை அமைக்கிறது

அனைத்து 4 செமிகண்டக்டர் அலகுகளின் கட்டுமானம் விரைவான வேகத்தில் முன்னேறி வருகிறது. அலகுகளுக்கு அருகில் ஒரு வலுவான செமிகண்டக்டர் சூழலியல் அமைப்பு உருவாகி வருகிறது. இந்த 4 அலகுகளும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும். இந்த அலகுகளின் ஒட்டுமொத்த திறன் ஒரு நாளைக்கு சுமார் 7 கோடி சில்லுகள்  ஆகும்.

*****

PKV/KPG/KR/DL