Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“சலீம் துரானி, அவர்  ஒரு  கிரிக்கெட் பல்கலைக்கழகம், ஜாம்பவான். கிரிக்கெட் உலகில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றினார். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் தனது ஸ்டைலான ஆட்டத்துக்கு  பெயர் பெற்றவர். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’’.

“சலீம் துரானி அவர்கள்  குஜராத்துடன் மிகவும்  வலுவான நீண்டகால தொடர்பு கொண்டிருந்தார். சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிக்காக சில ஆண்டுகள் அவர் விளையாடினார். குஜராத்தையும் தனது இருப்பிடமாகக் கொண்டிருந்தார். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அவரது பன்முக ஆளுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது’’ .

**********

AD/PKV/DL