Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கால்நடை சபைக்கு இந்திய வேளாண் நிறுவனத்தின் இரண்டு ஏக்கர் நிலத்தை மாற்றித்தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய கால்நடை சபைக்கு புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் நிறுவனத்தின் இரண்டு ஏக்கர் நிலத்தை மாற்றித்தரும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலம் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் மொத்த குத்தகை வாடகையாக ரூ.8,01,278­க்கு சதுர மீட்டருக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் மாற்றித் தரப்படுகிறது.

இந்திய கால்நடை சபை கால்நடை அலுவலர்களின் பணியிடை பயிற்சி திறன்களை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்தும். இதற்கென குறுகிய கால வகுப்புகள் விலங்கியல் அறிவியல் ஆராய்ச்சி துறைகளில் நடத்தப்படும். இதற்கான வசதிகளை ஏற்படுத்திய பிறகு இந்திய கால்நடைகள் சபை கூடுதல் செயல்பாடுகளை தொடங்கும். இதன் நன்மைகள் நாட்டின் கிராமப்புற மக்களை சென்றடைய வழி செய்யப்படும். இதனையடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரிவபடுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

•••••