Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கடற்படை பொருள்வகை மேலாண்மை சேவையை (INMMS) ஒழுங்குபடுத்திய `A’ குரூப் பொறியியல் சேவையாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குரூப் `A’ பொறியியல் சேவை என்ற ஒழுங்குபடுத்திய பிரிவை, இந்திய கடற்படை பொருள்வகை மேலாண்மை சேவையை (INMMS) என்ற பெயர் கொண்ட பிரிவை உருவாக்கவும், அதன் தொடர்ச்சியாக இந்திய கடற்படையின் கடற்படை ஸ்டோர் அதிகாரிகள் பிரிவில் தற்போதுள்ள குரூப் `A’ பணிநிலையில், பணிநிலை அமைப்புமுறையில் மாற்றங்கள் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒழுங்குபடுத்திய குரூப் `A’ சேவை உருவாக்கப்படுவதன் மூலம், சிறந்த திறமைசாலிகள் ஈர்க்கப்பட்டு, பொருள்கள் மேலாண்மைக்கு தொழில்நுட்ப ரீதியில் தகுதி பெற்றவர்கள் கொண்டுவரப் படுவார்கள். கடற்படை ஸ்டோர்களில் பொருள்கள் மேலாண்மையில் செயல்பாட்டு திறனை இது மேம்படுத்தி, அனைத்து சமயங்களிலும் செயல்படுவதற்கு கடற்படை தயாராக இருப்பதை உறுதி செய்யும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள INMMS, சிறந்த திறமைசாலிகளை ஈர்த்து, இந்திய கடற்படையின் பொருள்கள் மேலாண்மை செயல்பாடுகளைக் கையாள்வதற்கு, தொழில்நுட்ப ரீதியில் தகுதி பெற்ற பொருள்கள் மேலாளர்களின் தொகுப்பை அளிக்கும். கடற்படை ஸ்டோர்களில் பொருள்கள் மேலாண்மையின் செயல்பாட்டு திறனை இது மேம்படுத்தி, எந்த சமயத்திலும் செயல்பட தயார் நிலையில் கடற்படை இருப்பதை உறுதி செய்வதுடன், இதில் சேருபவர்களுக்கு சிறந்த பணி வாய்ப்புகளை அளிப்பதாகவும் இருக்கும்.

***