Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மறுமூலதனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மறுமூலதனத்திற்கு இன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

I. இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் மறுமூலதனம் செய்வதற்கு வசதியாக, ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய அரசு மறுமூலதன பத்திரம் வெளியிடும்.

II. இந்த தொகை 2018-19 ஆம் நிதியாண்டில் 4,500 கோடி ரூபாயும், 2019-20 நிதியாண்டில் 1,500 கோடி ரூபாயும் இந்த வங்கியில் மறுமூலதனம் செய்யப்படும்.

III. இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மூலதனத்தை 10 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தாக்கம்:

• இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி நாட்டின் முதன்மை ஏற்றுமதி கடன் வழங்கும் அமைப்பு.

• ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் மேற்கொள்ளப்படும் மறு மூலதனம், அந்த வங்கியின் முதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் ஆதரவளிக்கவும் வகை செய்யும்.

• இந்த மறு மூலதனம், இந்திய ஜவுளி ஆலைகளுக்கு ஆதரவளிப்பது போன்ற புதிய முன்முயற்சிகள், சலுகை நிதித்திட்டங்களில் மாறுதல் செய்தல், இந்தியாவின் வெளியறவுக் கொள்கை மற்றும் செயல்பாட்டு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் புதிய கடனுதவி வழங்குதல் போன்ற எதிர்பார்க்கப்படும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும்.

***