Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய அயல் பணி தொகுப்பு பயிற்சி அலுவலர்கள் பிரதமரைச் சந்தித்தனர்


2016ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்திய அயல் பணிச் சேவை 41 பயிற்சி அலுவலர்கள் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர். அயல் பணித்தொகுதி அலுவலர்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்களாகவும் உலகளாவிய சிந்தனை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களிடம் பிரதமர் வலியுறுத்தினார். இதர பணித்தொகுப்புகளைச் சேர்ந்த இதே குழுவின் பயிற்சி பெற்ற சக அலுவலர்ளுடன் தொடர்பில் இருக்குமாறுக் கேட்டுக் கொண்ட பிரதமர் இதன் மூலம் உள்நாட்டின் நிலவரம் மற்றும் மேம்பாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று பரவலாக உலகெங்கும் நம்பப்படுகிறது. என்று கூறிய பிரதமர் உலக நாடுகள் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலைமையை நன்கு ஏற்று கொள்கிறார்கள் என்றும் கூறினார்.