Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய அஞ்சல் சேவையில் பணியாளர்கள் மறு ஆய்வக மத்திய அமைச்சரவை முன் தேதியிட்டு ஒப்புதல்


இந்திய அஞ்சல் சேவையில் பணியாளர் மறு ஆய்வு மேற்கொள்ளும் யோசனைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை முன் தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பணியாளர் மறு ஆய்வு இந்திய அஞ்சல் துறை தனது செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யவும், செயல்பாட்டு தேவைகள் அடிப்படையில் தனது பணியாளர்கள் கட்டமைப்பை தலைமையகங்கள் மற்றும் களத்தில் வலுப்படுத்திக் கொள்ளவும் செய்து அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவு செய்வது, தற்போதைய சுணக்கத்தை குறைக்கவும், இந்திய அஞ்சல் சேவை அதிகாரிகளின் பணி வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவும்.

தலைமை இயக்குநர் (அஞசல் செயல்பாடுகள்) பதவியை ஏற்படுத்துதல், ஹெச்.ஏ.ஜி. + ஊதியத்தில் கூடுதல் தலைமை இயக்குனர் பணியிடத்தை உருவாக்குதல், ஒரு ஹெச்.ஏ.ஜி. பணியிடத்தை உருவாக்குதுல், 5 எஸ்.ஏ.ஜி. மட்டத்திலான பணியிடங்கள் மற்றும் ஜே.ஏ.ஜி. மட்டத்தில் 4 பணியிடங்கள் மற்றும் ஜெ.டி.எஸ். மட்டத்தில் 84 பணியிடங்களாக அதிகரித்தல் ஆகியவை அடங்கும். புதிய இடங்கள் உருவாக்கப்படும் போது எஸ்.டி.எஸ். பணியிடங்களை 96 ஆக குறைக்கவும் இந்த யோசனை பரிந்துரைக்கிறது. இதன் மூலம் பணியிடங்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.

மேற்கூறப்பட்ட இந்த பணியை மேற்கொள்ளவதற்கு சி.ஆர்.சி. பரிந்துரைகள் குறித்து தேவையான ஆலோசனைகள் நிதித்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர், பொது விவகாரங்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்துடன் நடத்தவும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு செலவினங்கள் துறை தனது ஒப்புதலை அளித்துள்ளது.