Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி அமைக்கும் திட்ட மதிப்பீட்டை திருத்தியமைக்க அமைச்சரவை ஒப்புதல்


இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 800 கோடியில் இருந்து ரூ. 1435 கோடியாக திருத்தியமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட செலவு மதிப்பீடுகளில் கூடுதலாக உள்ள ரூ. 635 கோடியில் தொழில்நுட்ப செலவுகள் ரூ. 400 கோடி மற்றும் மனிதவள செலவுகள் ரூ. 235 கோடி அடங்கும்.

விவரங்கள்:

இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கிச் சேவைகள் 2018 செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 650 அஞ்சலக கிளைகளிலும் 1.55 லட்சம் அலுவலக அஞ்சலகங்களிலும் 2018 டிசம்பர் முதல் கிடைக்கும்.

  • இந்த திட்டம் 3500 திறன் பெற்ற வங்கிப்பணி நிபுணர்கள் மற்றும் நாடு முழுவதும் நிதி கல்வியறிவை பரப்புவதில் ஈடுபட்டுள்ள இதர நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சாமானிய மனிதர்களுக்கு மிகவும் அணுகத்தக்க, கட்டுபடியாகக்கூடிய மற்றும் நம்பிக்கையான வங்கியை உருவாக்குவது; வங்கிச் சேவைகளை பெறாதவர்களுக்கு நிதி உள்ளடக்கத்திற்கான தடைகளை நீக்குவது; வங்கிச் சேவைகளை வீடுகளின் வாசலிலேயே அளிப்பது அதன் மூலம் செலவுகளை குறைப்பது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்த திட்டம் அரசின் குறைவான ரொக்கம் என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவு அளிப்பதுடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும்.
  • இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வங்கித் தர செயல்திறன், மோசடி மற்றும் ஆபத்துகளை நீக்கும் தரங்களைக் கருத்தில் கொண்டும் பணப்பட்டுவாடா மற்றும் வங்கித்துறையின் சிறந்த நடைமுறைகளைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி சேவைகள்

 இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி தனது தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் கட்டண/நிதி சேவைகள் அளிக்கும். இந்த சேவைகளை அஞ்சல் துறை பணியாளர்கள்/கடை நிலை முகவர்கள் அளித்து அவர்களை வெறும் தபால்களை அளிப்பவர் என்ற நிலையில் இருந்து நிதிச் சேவைகளை அளிப்பவர்களாக மாற்றும்.

இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வண்ட்க்கி கடை நிலை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை/கமிஷனை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வாடிக்கையாளர்களிடையே இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கியை பிரபலப்படுத்த அவர்களை ஊக்குவிக்கும்.

அஞ்சலக துறைக்கு கிடைக்கும் கமிஷனின் பகுதி அஞ்சலகங்களை அதிகரிக்க பயன்படுத்தப்படும்.

 

  • ••••