Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-ஸ்வீடன் மெய்நிகர் கூட்டத்தில் பிரதமரின் உரை

இந்தியா-ஸ்வீடன் மெய்நிகர் கூட்டத்தில் பிரதமரின் உரை


மாண்புமிகு

ஸ்வீடன் பிரதமருக்கு வணக்கம்!

முதலில், ஸ்வீடனில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு, இந்தியா சார்பில் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்வீடனில் நேற்று முன்தினம் நடந்த வன்முறை தாக்குதலுக்கு, அனைத்து இந்திய மக்களின் சார்பில், ஸ்வீடன் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

மாண்பு மிகு பிரதமர் அவர்களே,

2018ம் ஆண்டில், முதல் இந்தியாநார்டிக் உச்சிமாநாட்டை ஸ்வீடன் நடத்தியது. அப்போது, நான் ஸ்டாக்ஹோம் வரும் வாய்ப்பை பெற்றேன்இரண்டாவது இந்தியாநார்டிக் உச்சிமாநாட்டின்போது, நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை பெறுவோம்.

கடந்த 2019ம் ஆண்டில், மேதகு ஸ்வீடன் மன்னர் மற்றும் ராணி ஆகியோர்  இந்தியா வந்தது எங்களின் மிகச் சிறந்த பாக்கியம். அவர்களுடன் நான் பல விஷயங்கள் குறித்து நல்ல ஆலோசனை நடத்தினேன். வைக்கோலை, மின்உற்பத்தி நிலையங்களில் எரிபொருளாக பயன்படுத்துவதில் கூட்டாக செயல்படுவது குறித்து நாங்கள் ஆலோசித்தது நன்றாக எனக்கு நினைவிருக்கிறது

 

அந்தப் பணிகள்  தற்போது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உயிரி கழிவுப் பொருட்களை, நாம் கரியாக்கி, அதை நாம் விரிவாக பயன்படுத்த முடியும்.

மாண்பு மிகு பிரதமர் அவர்களே,

கொவிட்-19 சமயத்தில், பிராந்திய மற்றும் உலகளவில் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தோம்கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பேராட்டத்தில் உலகத்துக்கு உதவ, 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய சாதனங்களை இந்தியா வழங்கியது

மேலும், ஆசியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் ஆன்லைன் பயிற்சி திட்டங்கள் மூலம் நாங்கள் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கச் செய்துள்ளோம்வரும் நாட்களில், இன்னும் பல நாடுகளுக்கு, கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்க உறுதியுடன் இருக்கிறோம்.

மாண்பு மிகு பிரதமர் அவர்களே,

இன்றைய சூழலில், ஒரே எண்ணம் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டுசெயல்பாடு ஆகியவை மிகவும் முக்கியமானவை. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவிதிமுறைகள், சமத்துவம், சுதந்திரம், நீதி போன்ற  பகிரப்பட்ட மதிப்புகள் நமது உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.

பருவநிலை மாற்றம் குறித்த முக்கியமான விஷயம், நமது இரு நாடுகளுக்கும் முன்னுரிமையானது. இது குறித்து உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்சுற்றுச்சூழலை பாதுகாப்பது, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது ஆகியவற்றுக்கு இந்தியாவின் கலாச்சாரம் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தில் நாம் அளித்த உறுதிகள் படி நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம்இந்த இலக்குகளை மட்டும் நாம் அடையாமல்அதையும் தாண்டி சாதிப்போம்.

 ஜி 20 நாடுகளிடையே இந்தியா, தனது கடமைகளில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த 5 ஆண்டுகளில் 162 சதவீதம் அதிகரித்துள்ளது.

2030ம் ஆண்டுக்குள், 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்ய நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், 30 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை நாங்கள் சேமித்துள்ளோம்

சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் இணைய ஸ்வீடன் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பு கூட்டணியிலும், விரைவில் நீங்கள் இணைய நாங்கள் அழைக்கிறோம்.

மாண்பு மிகு பிரதமர் அவர்களே,

கொவிட்டுக்கு பிந்தைய நிலைப்படுத்துதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில், இந்தியாஸ்வீடன் இடையேயான கூட்டு, முக்கிய பங்காற்ற முடியும்புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், முதலீடு, தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த முடியும்

ஸ்மார்ட் நகரங்கள், நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை, சுழற்ச்சி பொருளாதாரம், ஸ்மார்ட் மின் தொகுப்பு, மின்போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகிய பிரிவுகளிலும், ஒத்துழைப்புடன் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நமது மெய்நிகர் கூட்டம், நமது ஒத்துழைப்பில் புதிய பரிமாணங்களை சேர்க்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

மாண்பு மிகு பிரதமர் அவர்களே,

ஸ்வீடன் மக்களுடனான இந்தியாவின் சிறந்த நட்பு பயணத்தை நான் மீண்டும் நினைத்து பார்க்கிறேன் மற்றும் உங்கள் கருத்துக்களையும் நான் இப்போது வரவேற்கிறேன்.

—–