பிரதமர் திரு.நரேந்திரமோடி, வியட்னாம் நாட்டின் பிரதமர் திரு. குயேன் சுவான் புக் இடையிலான உச்சிமாநாடு, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இரு பிரதமர்களும், தற்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அமைதி, வளம் மற்றும் மக்களுக்கான கூட்டு தொலைநோக்குத் திட்டம் ஒன்று, இந்த மாநாட்டின்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த செயல்திட்டம், இந்தியா–வியட்னாம் இடையிலான விரிவான ராணுவ ஒத்துழைப்புகளை வருங்காலத்தில் மேம்படுத்துவதற்கு வழிகாட்டுவதாக இருக்கும். இந்த கூட்டு தொலைநோக்குத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, 2021-2023 காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடுவதையும், இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
அனைத்துத் துறைகளிலும், இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், இரு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர். இரு நாடுகளின் தேச வளர்ச்சிக்கான முன்னுரிமைப் பணிகளுக்கு, ஒரு நாடு, சகநாட்டின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு, இந்தோ–பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பான, சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் விதிமுறைகள் அடிப்படையில், இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட நோக்கத்திற்காக, ஒருங்கிணைந்து பாடுபடுவது எனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு உட்பட, பொதுவான உலகளாவிய சவால்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அவர்கள் உறுதிபூண்டனர். பெருந்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய, மேலும் ஒருங்கிணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். பல்வேறு உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில், இரு நாடுகளும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளதன் அடிப்படையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில், அடுத்த ஆண்டு முதல் இரு நாடுகளும் தற்காலிக உறுப்பினராக பணியாற்ற உள்ள நிலையில், பன்னாட்டு அமைப்புகளில், இந்தியாவும், வியட்னாமும் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படவும், இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.
இந்தோ–பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியாவின் முன்முயற்சிகள் மற்றும் ஆசியான் அமைப்பின் செயல்திட்டமான பாதுகாப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்ளுதல், வளம் மற்றும் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கான பொதுவான அம்சங்களின் அடிப்படையில், கடல்சார் பிரச்சினைகளில், புதிய மற்றும் நடைமுறைக்கு உகந்த வாய்ப்புகளை ஆராயவும் இரு நாட்டுப் பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.
விரைவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள், இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஐடிஇசி மற்றும் மின்னணு ஐடிஇசி முன்முயற்சிகள், பி.எச்.டி. படிப்புக்கான ஆராய்ச்சி உதவித்தொகைகள் மற்றும் வியட்நாமின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு, டிஜிட்டல் இணைப்பு, மற்றும் பாரம்பரியத் தலங்கள் பாதுகாப்பு போன்ற அம்சங்களில், வியட்னாமின் முன்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டையும், பிரதமர் திரு.நரேந்திரமோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வியட்னாமுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவிகளை நீட்டிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கும், வியட்னாமின் நின் துவான் மாகாணத்தில் வசிக்கும் உள்ளூர் சமுதாயம் பயனடையும் விதமாக, இந்தியா நிதியுதவி வழங்குவதற்கும் இரு நாட்டு பிரதமர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
வியட்னாமில் உள்ள மை சன் ஆலயப் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக்காக, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் மேற்கொண்ட பணிகள் குறித்து மனநிறைவு தெரிவித்த பிரதமர் திரு.நரேந்திரமோடி, இதுபோன்று மேற்கொள்ளப்பட உள்ள பிற திட்டங்களிலும் வியட்னாமுடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
*******************
Addressing the India-Vietnam Virtual Summit. https://t.co/EJoqxllN6Q
— Narendra Modi (@narendramodi) December 21, 2020
Held a Virtual Summit H.E. Nguyen Xuan Phuc, PM of Vietnam. We reviewed our cooperation on bilateral, regional and multilateral issues, and adopted a ‘Joint Vision for Peace, Prosperity and People’ to give direction to our Comprehensive Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) December 21, 2020