பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா வங்காளதேசம் இடையே உறைவிட பரிமாற்றத்திற்கு பிறகு, வங்காளதேசம் உறைவிடங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், கூச் பீகார் மாவட்டத்தை மேம்படுத்தவும், அகதிகள் மறுவாழ்வுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மொத்தம் ரூ1005.99 கோடி செலவு பிடிக்கும். இதில் ரூ. 898.50 கோடி கூச் பேகார் மாவட்டத்தையும், இந்தியாவில் உள்ள வங்காளதேசம் உறைவிடங்களை மேம்படுத்தவும் செலவிடப்படும். மறுவாழ்வுக்கென ரூ. 107.49 கோடி செலவிடப்படும். மறுவாழ்வுக்கென செலவிடப்படும் தொகை, இந்தியாவுக்கு திரும்பும் வங்காளதேச குடும்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாறுபடும்.
இந்த அத்தனை பணிகளும் மாநில அரசு அல்லது அதன் நிறுவனங்கள் மூலமாக 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். இதற்கான நிதி, உள்துறை அமைச்சகம் மூலமாக மான்யமாக வழங்கப்படும்.
மேற்கு வங்க அரசு அளித்த கருத்துருவின் அடிப்படையில், அகதிகள் மறுவாழ்வு, மற்றும் இந்தியா வங்காளதேசம் இடையேயான உறைவிட பரிமாற்றம் மற்றும் வங்காளதேசம் உறைவிட உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கூச் பீகார் மாவட்டத்தின் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த மறுவாழ்வு திட்டங்கள், மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை மக்களும், வாழ்விடங்களும், தடையற்ற முறையில் இணைய உதவும்.