Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மீண்டும் நிலவுக்குச் செல்கிறது: இந்த முறை நிலவில் இறங்கிய பிறகு மீண்டும் பூமிக்கு வர உள்ளது இந்திய விண்கலம்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சந்திரயான் -4 விண்கலம், நிலவில்  தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்), 2040 க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால இந்திய விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்க, விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு திறன்களை மேம்படுத்துவது உட்பட தொடர்ச்சியான  செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

விண்கலத்தை உருவாக்கி, செலுத்தும் பணியை இஸ்ரோ மேற்கொள்ளும். இத்திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைமுறையில் உள்ள நடைமுறைகள் மூலம் திறம்பட நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

சந்திரயான்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்த ரூ.2104.06 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த செலவில் விண்கல மேம்பாடு, உணர்தல், எல்விஎம் 3-ன் இரண்டு ஏவு வாகன பயணங்கள், வெளிப்புற ஆழமான விண்வெளி நெட்வொர்க் ஆதரவு, வடிவமைப்பு சரிபார்ப்புக்கான சிறப்பு சோதனைகளை நடத்துதல், இறுதியாக சந்திர மேற்பரப்பில் தரையிறங்குதல், சேகரிக்கப்பட்ட சந்திர மாதிரியுடன் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புதல் ஆகியவை அனைத்தும் அடங்கும்.

மனிதர்களை அனுப்புவதற்கான முக்கியமான அடிப்படை தொழில்நுட்பங்கள், சந்திர மாதிரி திரும்பப் பெறுதல், சந்திர மாதிரிகளின் அறிவியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற இந்த இயக்கம் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2055983

***

PLM/AG/DL