Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மாறுகிறது; ஏனெனில் இந்தியர்கள் மாற முடிவெடுத்துவிட்டனர்: பிரதமர்

இந்தியா மாறுகிறது; ஏனெனில் இந்தியர்கள் மாற முடிவெடுத்துவிட்டனர்: பிரதமர்

இந்தியா மாறுகிறது; ஏனெனில் இந்தியர்கள் மாற முடிவெடுத்துவிட்டனர்: பிரதமர்

இந்தியா மாறுகிறது; ஏனெனில் இந்தியர்கள் மாற முடிவெடுத்துவிட்டனர்: பிரதமர்


சூரத்தில் நடைபெற்ற புதிய இந்தியா இளைஞர் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இளம் தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடினார். புதிய இந்தியா இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

நமது நாடு மாறிவருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, மேம்படுத்தப்பட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மக்கள் முடிவேடுத்ததால்தான் இது சாத்தியமாகிறது என்று கூறினார். புதிய இந்தியா இளைஞர் மாநாட்டில் இன்று உரையாடிய பிரதமர், எதுவும் நடக்காது எதுவும் மாறாது என்ற மனப்பான்மை முன்பு இருந்தது. ஆனால், இன்று இது மாறியுள்ளது. அது வெளிப்படையாகத் தெரிகிறது. “ஒரு காலகட்டத்தில் ஏதும் மாறாது என்ற மனப்பான்மை மக்களிடம் இருந்தது. நாங்கள் வந்தவுடன் இந்த மனப்பான்மையை முதலில் மாற்றினோம் – இப்போது எல்லாம் மாற முடியும். இந்தியா மாறுகிறது, ஏனெனில் இந்தியர்கள் மாற முடிவெடுத்து விட்டனர்”, என்று அவர் கூறினார்.

இந்தியாவின் வலிமையை குறித்து பேசிய பிரதமர், “தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர், அதன் பிறகு என்ன நேர்ந்தது? எங்கள் ஆட்சி காலத்தில், உரி தாக்குதல் நடந்தது, அதன் பிறகு என்ன நேர்ந்தது? இதுதான் மாற்றம். நமது ராணுவ வீரர்களின் மனதில் இருந்த அதே நெருப்பு பிரதமரின் மனத்திலும் இருந்தது, அதன் விளைவு துல்லியமான தாக்குதல் நடைபெற்றது. உரியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்னை தூங்க விடவில்லை, அதன் பிறகு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இது தான் மாற்றம்.”, என்று கூறினார்.

கருப்பு பணத்திற்கு எதிராக அரசு எடுத்த முயற்ச்சிகள் மிகவும் தைரியமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை ஆகும், என்று பிரதமர் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் மூன்று லட்சம் நிறுவனங்களை மூடிவிட்டனர். கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியும் என்று யாருமே நினைக்கவில்லை, என்று பிரதமர் கூறினார்.

“இந்திய மக்களின் உணர்வு மாறியுள்ளது, அது நாட்டையும் மாற்றும், எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. முன்பு எல்லாவற்றையும் மக்களால்தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைத்தனர், ஆனால், நாங்கள் அதனை மாற்றியுள்ளோம். நாம் அனைவரையும் விட நாடு பெரியது”, என்று கூறினார்.

இன்று தான் பங்கேற்கும் நான்காவது பொது கூட்டம் இது, இருப்பினும் தான் சோர்வடையவில்லை என்று பிரதமர் கூறினார். “நான் சோர்வாக இல்லை, நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா?” என்று மக்களை பிரதமர் கேட்க, உர்த்த குரலில் இல்லை என்று மக்கள் கூறினர்.

குஜராத்திற்கு, இன்று மேற்கொண்ட தனது ஒருநாள் பயணத்தில், பிரதமர் சூரத் விமான நிலைய முனையக் கட்டிடத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சூரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்தார். சூரத்தில் உள்ள ரசிலாபென் செவந்திலால் ஷா வீனஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தண்டியில் உள்ள தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவகத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

*****

வி.கீ/ஸ்ரீ