பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே ஒலி, ஒளி கூட்டுத் தயாரிப்பிற்கான ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.
ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்
• இந்த ஒப்பந்தம், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் சித்திர திரைப்படங்களின் கூட்டுத் தயாரிப்பிற்கு பொருந்தும்.
• முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு, இரு நாடுகளும் தங்கள் சட்டங்கள் மற்றும் வரைமுறைகளுக்குட்பட்டு தயாரிக்கப்படும் எந்த ஒலி-ஒளி படைப்பிற்கும் வழங்கும் பயன்களை பெற இயலும்.
• இது இருநாடுகளுக்கிடையே கலை மற்றும் கலாச்சாரங்களை பரிமாறிக்கொள்ள முன்னெடுத்து செல்வதுடன், இரு நாட்டு மக்களிடையே நல்லெண்ணம் மற்றும் சிறந்த புரிதலையும் உருவாக்கும்.
• கூட்டுத் தயாரிப்புகள், நமது மென் சக்தியை உருவாக்கிடவும், வெளிப்படுத்திடவும் வாய்ப்பளிக்கும்.
• இது கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள் மற்றும் தயாரிப்பிற்குப் பின் மற்றும் அதன் விற்பனை உள்ளிட்ட ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு பிரிவுகளை சேர்ந்த தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் ஆகியோருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் இரு நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
• படப்பிடிப்பின்போது உள்ளூர் மக்களை பயன்படுத்திக் கொள்வது, உலக நாடுகளிடையே இந்தியா விரும்பத்தக்க படப்பிடிப்புத் தளமாக விளங்குவதற்கான தன்மை/ வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
இந்தியா இதுவரை, இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், நியூசீலாந்து, போலாந்து, ஸ்பெயின், கனடா, சீனா மற்றும் கொரிய குடியரசு ஆகியவற்றுக்கு இடையே ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்புகளுக்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.