Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான வழிசெலுத்துதலுக்கான உதவி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய அரசு, கப்பல் அமைச்சகம், கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை ஒளிகப்பல் இயக்குநரகம் மற்றும் வங்காளதேச அரசு, கப்பல் துறை இடையே வழிசெலுத்துதலுக்கான உதவிகள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதற்கு ஒப்புதல் அளித்தது.

வங்காளதேசம் மற்றும் இந்தியா இடையேயான கூட்டுறவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியத்துவம் அளித்துள்ளது:

அ. கலங்கரை விளக்கங்கள் மற்றும் கலங்கரை ஒளிவிளக்கு கப்பல்களுக்கு அறிவுரை வழங்குவதை விரிவுபடுத்துதல்;

ஆ. கப்பல் போக்குவரத்து சேவை மற்றும் தானியங்கி அடையாள அமைப்பு தொடர்பிற்கான அறிவுரை வழங்குவதை விரிவுபடுத்துதல்; மற்றும்

இ. வழிசெலுத்துதல் மற்றும் கலங்கரைவிளக்க முகமைகளுக்கு கடல் உதவிகளுக்கான பன்னாட்டு கழகத்தின் பயிற்சி திட்டப்படி, வங்காளதேச வழிசெலுத்துதலுக்கான உதவிகள் மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்பாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்க்கண்ட பிரிவுகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுக்கும்:

அ. வழிசெலுத்துதலுக்கான உதவிகள் குறித்து அறிவுரை வழங்குதல்;

ஆ. வழிசெலுத்துதலுக்கான உதவிகள் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல் மூலம் கல்வி கலந்துரையாடல் அளித்தல், மற்றும்

இ. வழிசெலுத்துதலுக்கான உதவிகள் பிரிவுகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிலகங்கள்/மாநாடுகளை நடத்துவதற்கு தேவையான கூட்டுறவை அளித்தல்.
தெற்காசிய பகுதிகளில் வழிசெலுத்துதலுக்கான உதவிகள் பிரிவில் திறன்வளர் பயிற்சி அளிப்பதற்கான உயர் கூட்டுறவிற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இது, ஐ.ஏ.எல்.ஏ. மாதிரி பயிற்சி இ-141/1 அடிப்படையில் வழிசெலுத்துதலுக்கான கடல் உதவிகள் மேலாணமை குறித்து பயிற்சியளிப்பதற்கு உத்வேகம் அளிப்பதுடன், ஐ.ஏ.எல்.ஏ. வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொழில்முறை பயிற்சி திட்டத்தை அளிப்பதற்கு வழிவகுக்கும்.
தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியா மற்றும் வங்களாதேசம் ஆகியவை இரு முக்கியமான வளரும் நாடுகளாகும். சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும், இருநாடுகளை சேர்ந்த பிரமுகர்களின் பல்வேறு வருகைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு, இரு நாடுகளும் நீண்ட கால நட்புறவு மற்றும் சுமூக உறவை பராமரித்து வருகின்றன.

பின்னனி:

பன்னாட்டு கடற்சார் அமைப்புகளின் தேவைக்கேற்ப, பல்வேறு நாடுகளில் உள்ள அதிகாரிகள், பன்னாட்டு பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப தங்கள் கடற்பரப்பில் வழிசெலுத்துதலுக்கான உதவிகளை அளிக்கின்றனர். கப்பல்களின் மற்றும்/அல்லது கப்பல் போக்குவரத்தை, பாதுகாப்பான மற்றும் சிறந்த வகையில் உறுதி செய்யும் வகையில், கலங்கரை விளக்கங்கள், எச்சரிக்கை விளக்குகள், டி,ஜி.பி.எஸ், வழிசெலுத்துதல் மற்றும் நங்கூரமிட்ட மிதவைகள் போன்ற வழிசெலுத்துதலுக்கான கடல் உதவிகள் இயக்கப்படுகின்றன. இந்திய கடற்பரப்பில் பாதுகாப்பான வழிசெலுத்துதலுக்கான, இந்திய வழிசெலுத்துதல்களுக்கான உதவிகளை கலங்கரைவிளக்கங்கள் மற்றும் ஒளிகப்பல்களின் இயக்குநரகம் நிறுவி, நிர்வகித்து வருகிறது. கலங்கரைவிளக்கங்கள் மற்றும் ஒளிகப்பல்களின் இயக்குநரகம் கலங்கரைவிளக்கம் பொறியியலில் வல்லுமை பெற்றுள்ளதுடன், 193 கலங்கரை விளக்கங்கள், 64 ரகான்கள், 22 ஆழ்கடல் ஒளி மிதவைகள், 23 டீ.ஜி.பி.எஸ். நிலையங்கள், 01 ஒளிகப்பல், 04 ஒப்பந்த கப்பல்கள், தேசிய ஏ.ஐ.எஸ். இணைப்பு, கட்ச் வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து சேவை போன்ற பெருமளவிலான வழிசெலுத்துதல்களுக்கான உதவிகளை நிர்வகித்து வருகின்றன.

ஐ.ஏ.எல்.ஏ. என்பது அனைத்து வழிசெலுத்துதலுக்கான உதவிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான பன்னாட்டு அமைப்பு ஆகும். கலங்கரைவிளக்கங்கள் மற்றும் ஒளிகப்பல்களின் இயக்குநரகம் மூலம் இந்தியா, ஐ.ஏ.எல்.ஏ, மன்றத்தில் உறுப்பினராக உள்ளது. பிராந்திய கூட்டுறவின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் வங்காளதேசம் வழிசெலுத்துதலுக்கான உதவிகள் குறித்து கூட்டுறவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியா, தனது அண்டை நாட்டின், வங்காளதேசம், கப்பல் அமைச்சகம், கப்பல் துறைக்கு, கப்பல் போக்குவரத்து சேவை, தானியங்கி கண்டறிதல் அமைப்பு உள்ளிட்ட வழிசெலுத்துலுக்கான உதவிகள் குறித்து ஆலோசனை வழங்கும். வங்காளதேசத்தின் வழிசெலுத்துதலுக்கான உதவிகள் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில், கலங்கரைவிளக்கங்கள் மற்றும் ஒளிகப்பல்களின் இயக்குநரகம், ஐ.ஏ.எல்.ஏ. பயிற்சி திட்டப்படி வழிசெலுத்துதல்களுக்கான உதவிகள் மேலாளர் மற்றும் தொழில்நுட்பாளர்களுக்கு பயிற்சியளிப்பதுடன், பயிலகங்கள்/ மாநாடுகளை நடத்தும். இது வங்காளதேசத்தின் வழிகாட்டுதலுக்கான உதவிகள் பணியாளர்களின் திறனை வளர்க்க உதவும்.