Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் பூட்டான் இடையே வணிகம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான புதிய ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை. இந்தியா மற்றும் பூட்டான் இடையே வணிகம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான புதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான இருநாட்டு வர்த்தக உறவுகள், இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான வணிகம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான புதிய ஒப்பந்தத்தின்படி நடைபெறுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே சுதந்திரமான வணிகத்திற்கு வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தம் மூன்றாம் நாடுகளுக்கு வணிகத்திற்காக பூட்டான் பொருட்களை சுங்கக்கட்டணம் ஏதுமின்றி கொண்டு செல்ல வழி வகுக்கிறது.

2006, ஜூலை 29 அன்று இந்த ஒப்பந்தம் பத்தாண்டு காலத்திற்கு புதுப்பிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம். 2016, ஜுலை, 29 முதல் மேலும் ஓராண்டு ஆண்டு காலத்திற்கு அல்லது தூதரக குறிப்புகள் பரிமாற்றம் மூலம் ஏற்படும் புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பூட்டானுக்கு இடையே நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலான பராம்பரியமான உயரிய இருநாட்டு உறவுகள், பல ஆண்டுகளாக உயர்ந்து வந்துள்ளதோடு, பரிந்துரைக்கப்பட்டுள்ள வணிகம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதன் மூலம் மேலும் வலுப்பெறும்.