பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான ஜெபு கால்நடை மரபியல் மற்றும் இனப்பெருக்க உதவி தொழில்நுட்பங்கள் துறைகளில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2016, அக்டோபரில் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான தற்போதுள்ள நட்புறவை வளர்ப்பதுடன், இருதரப்பும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட வழிமுறைககளின்படி கூட்டாக கால்நடைகளின் மரபியல் மற்றும் இனப்பெருக்கத்திற்கான உதவி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கவும், செயல் திட்டத்தை உருவாக்கவும் மற்றும் அவ்வப்போது அதனை மதிப்பீடு செய்வதற்காகவும் இரு தரப்பு பிரதிநிதிகளின் சமமான எண்ணிக்கை கொண்ட செயல்பாட்டுக் குழு உருவாக்கப்படும்.
நிலையான பால் வளர்ச்சி மற்றும் நிறுவனத்தை வலுவாக்குவதற்கான தற்போதுள்ள அறிவுத்திறனை மேலும் அதிகரிக்கும்வண்ணம், கால்நடை மற்றும் எருமைமாடுகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க கூட்டு முயற்சி மூலம் இது மேற்கொள்ளப்படும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, அறிவியில் கூட்டுறவை ஊக்குவிக்க வழிவகுப்பதுடன், செபு கால்நடைக்கான மரபியல் தேர்வுத் திட்டத்தை (அ) செபு கால்நடைகள் மற்றும் அவற்றின் கலப்பினங்கள் மற்றும் எருமை மாடுகளில் மரபியலை செயல்படுத்துதல் (ஆ) கால்நடை மற்றும் எருமை மாடுகளில் கருத்தரிக்க உதவும் தொழில்நுட்பங்களை (ஏ.ஆர்.டி.) செயல்படுத்துதல், (இ) மரபியல் மற்றும் கருத்தரிக்க உதவும் தொழில்நுட்ப தகுதித்திறனை வளர்த்தல் (ஈ) இரு நாடுகளின் சட்டத்திட்டங்கள் மற்றும் வழிமுறைகளுக்குட்பட்டும், இந்திய அரசு(வணிக பரிமாற்றம்) விதிகள், 1961, இரண்டாவது அட்டவணையின் பிரிவு 7(டி)(1)-க்குட்பட்டு மரபியல் மற்றும் கருத்தரிக்க உதவும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேற்கொள்ளவும் உதவும்.