பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே (நடைமுறை) வருமானத்தின் மீதான இரட்டை வரிவிதிப்பை தவிர்த்தல் மற்றும் நிதி ஏய்ப்பை தடுத்தல் குறித்த நடைமுறைக்கான மூன்றாவது மரபை செயலுக்கு கொண்டு வருவதற்கான பின்னேற்பிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த மரபு 2016, அக்டோபர் 26 அன்று கையெழுத்தானது.
இந்த மரபு, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே வரி குறித்த தகவல்களை பராமரிக்க வகை செய்வதோடு, வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பை குறைக்கும். மேலும், இது இரு நாடுகளுக்கு இடையே வரி வருவாய் வசூல் செய்வதற்கும் உதவும்.
தற்போதுள்ள நடைமுறை ஒப்பந்தம் குறித்த சட்டப்பிரிவு கூறு 26-ஐ, தகவல் பரிமாறிக் கொள்வதற்கான பன்னாட்டு நடைமுறைக்கேற்ற வகையில் புதிய சட்டப்பிரிவு கூறு மூலம் மரபில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மரபில், ‘வரி வசூலில் உதவி’ என்ற புதிய சட்டபிரிவு கூறு சேர்க்கப்பட்டுள்ளது.
இம்மரபு, இருநாடுகளிலும் அறிவிக்கை வெளிடப்படுவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்த பின் வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும்.
பின்னனி:
ஒரு வெளிநாட்டுடன் அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்துடன், 1961, வருமான வரி சட்டத்தின் கீழ் வருமானமாக கருதப்படுவதை ஏய்ப்பதை அல்லது தவிர்ப்பதை தடுக்கும் நோக்கில் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள மத்திய அரசுக்கு வருமானவரி சட்டம், 1961, பிரிவு 90-ல், அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை 1986 டிசம்பர் 1986 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நடைமுறையில் 1997 முதல் மரபின் மூலம் 1997ம் ஆண்டும் இரண்டாவது மரபின் மூலம் 2000-ம் ஆண்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பன்னாட்டு தரத்திற்கேற்ப தகவல் பரிமாறிக்கொள்வதற்கான சட்டப்பிரிவு கூறை மூன்றாவது மரபின் மூலம் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டு, வரிகள் வசூலில் உதவி என்ற புதிய சட்டப்பிரிவு கூறு சேர்த்திட இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப, நியூசிலாந்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு மூன்றாவது மரபிற்கான சட்டப்பிரிவுகள் மீதான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.