Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் தைவான் நாடுகளிடையே விமான சேவை தொடர்பான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, தைவானில் உள்ள இந்திய தைபே சங்கம் (தைவானில் உள்ள இந்திய பிரதிநிதி) மற்றும் இந்தியாவில் உள்ள தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் (இந்தியாவில் உள்ள தைபே நாட்டின் பிரதிநிதி) விமான சேவை தொடர்பாக கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.

தற்போது இந்தியா மற்றும் தைபே நாடுகளிடையே விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தம் இல்லை. மாறாக, ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் நிறுவனம் மற்றும் தைபே விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமான சேவைகள் நடத்தப்படுகின்றது.

இந்த விமான சேவைகள் ஒப்பந்தம் இந்தியா மற்றும் தாய்பேய் இடையே விமான சேவைகள் தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாச்சார பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.