இந்தியா மற்றும் கத்தார் இடையேயான சுற்றுலா துறையிலான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
1. இரு நாடுகளும் பயன் அடையும் வகையில் சுற்றுலா துறையில் நீண்டகால ஒத்துழைப்பிற்கான சூழலை உருவாக்குதல்
2. சுற்றுலா துறை தொடர்பான நிபுணத்துவம், வெளியீடுகள், தகவல் / தரவுகள் மற்றும் புள்ளியியல் விவரங்களின் பரிமாற்றம்
3. திட்டங்கள், பிராச்சாரங்கள், விளம்பர பொருட்களின் பரிமாற்றம், வெளியீடுகள், படங்கள், ஊடங்கங்கள் மூலம் சுற்றுலா பொருட்களை விளம்பரபடுத்துதல் போன்றவற்றை ஊக்குவித்தல்.
4. இருதரப்பின் சுற்றுலாவினை ஊக்கபடுத்த டூர் ஆபரேட்டர்கள் / ஊடக நிபுணர்கள் / கருத்தாளர்கள் ஒரு நாட்டையும் பார்வையிடுதல்
5. இரு நாடுகளிலும் உள்ள சுற்றுலா துறை, சுற்றுலா பணியாளர்கள், டிராவல் ஏஜென்ட்டுகள் மற்றும் சுற்றுலா துறை தொடர்பான தனியார் நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை ஊக்க்ப்படுத்துதல்
6. சுற்றுலா துறையில் பொது தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதை ஊக்க்படுத்துதல்
இந்தியாவின் சுற்றுலா சந்தையில் கத்தார் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. (2015-ல் சுமார் 6313 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்). அதேபோல் இந்தியாவின் மருத்துவ சுற்றுலாவிலும் கத்தார் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்தியா சுற்றுலா துறை மேலும் வலுவடையும்.