Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் உருகுவே இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் உருகுவே இடையே சுங்க விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னேற்பிற்கும் ஒப்புதல் வழங்கியது.

சுங்கக் குற்றங்கள் தொடர்பான தடுப்பு மற்றும் விசாரணை குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். மேலும், இந்த ஒப்பந்தம் வணிகத்தை எளிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாடுகளுக்கிடையே வணிகப் பொருட்களுக்கு துரிதமாக ஒப்புதல் வழங்குவதையும் உறுதி செய்யும்.

இந்த வரைவு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையே சுங்கத்துறையிடம் உறுதியளிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பின் சரிதன்மை குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல், பொருட்கள் உருவான இடம் குறித்த சான்றிதழை உறுதி செய்தல் மற்றும் வணிகம் செய்யப்படும் பொருட்களின் விவரம் போன்ற பிரிவுகள் குறித்த இந்திய சுங்கத் துறையின் கவலைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும்.

பின்னனி:

லத்தின் அமெரிக்காவில் உள்ள வர்த்தக தொகுதியான மெர்கோசூர்-ல் (எம்.இ.ஆர்.சி.ஓ.எஸ்.யூ.ஆர்.) உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் ஒன்றான உருகுவே இந்தியாவின் முக்கிய வணிக பங்குதாரர் ஆகும். இந்தியா மெர்கோசூர் உடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அது 01 ஜுன், 2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியா மற்றும் உருகுவே ஆகிய இரு நாடுகள் சுங்க அதிகாரிகளுக்கு இடையே தகவல் மற்றும் கண்காணிப்பு குறித்த தகவல் பரிமாற்றம் குறித்த சட்டபூர்வ கட்டமைப்பை உருவாக்குவதோடு மற்றும் சுங்கச் சட்டங்கள், சுங்கக் குற்றங்கள் தடுப்பு மற்றும் விசாரணை ஆகியவற்றை முறையாக செயல்படுத்த உதவுவதோடு, எளிதான வகையில் சட்டபூர்வமாக வர்த்தகத்தை மேற்கொள்ளவும் உதவும். முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் வரைவு வரை இரு சுங்க நிர்வாகங்களின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டுள்ளது.